27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
21 1445425723 chips
சைவம்

வாழைக்காய் சிப்ஸ்

குழந்தைகள் மாலையில் சாப்பிடுவதற்கு ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ஸ்நாக்ஸ் ஏதும் இல்லையா? அப்படியெனில் வீட்டில் வாழைக்காய் இருந்தால், அதனைக் கொண்டு சிப்ஸ் செய்து கொடுங்கள். இது மிகவும் எளிய மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் ஸ்நாக்ஸ்.

சரி, இப்போது வாழைக்காய் சிப்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் – 1 உப்பு – தேவையான அளவு மிளகுத் தூள்/மிளகாய் தூள் – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாழைக்காயை நீரில் கழுவி, இரு முனைகளையும் வெட்டி தோலுரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மெல்லியதாக, வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் நன்கு சூடானதும், அதில் வாழைக்காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, ஒரு பௌலில் போட்டு, அதில் மிளகுத் தூள்/மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறினால், வாழைக்காய் சிப்ஸ் ரெடி!!!21 1445425723 chips

Related posts

குதிரைவாலி எள் சாதம்

nathan

பாசிப்பருப்பு உருண்டை குழம்பு

nathan

பீன்ஸ் பருப்பு மசியல் சமையல் குறிப்பு – Beans Paruppu masiyal Samayal kurippu

nathan

தனியா பொடி சாதம்

nathan

ஃபிரஞ்ச் ஃப்ரை

nathan

சூப்பரான கேழ்வரகு சேமியா வெஜிடபிள் பிரியாணி

nathan

பனீர் வெஜ் மின்ட் கறி

nathan

உருளைக்கிழங்கு கிரிஸ்பி

nathan

தக்காளி சாத மிக்ஸ்

nathan