27.9 C
Chennai
Monday, Nov 18, 2024
lhA4LfS
சிற்றுண்டி வகைகள்

சவ்சவ் கட்லெட்

என்னென்ன தேவை?

சவ்சவ் – 100 கிராம்,
கேழ்வரகு மாவு – 100 கிராம்,
வெங்காயம் – 50 கிராம்,
பச்சை மிளகாய் – 2-3,
எண்ணெய் – தேவையான அளவு,
சீரகம் – 1 டீஸ்பூன்,
சோம்பு – 1 டீஸ்பூன்,
சோள மாவு – 1 டீஸ்பூன்,
பிரெட் தூள் – 50 கிராம்,
கறிவேப்பிலை – சிறிது.
எப்படிச் செய்வது?

சவ்சவ்வை தனியாக வேக வைத்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அத்துடன் சவ் சவ், கேழ்வரகு மாவு, சோள மாவு சேர்த்துக் கிளறி கட்லெட் போன்று தட்டி தவாவில் போட்டு பொரித்தெடுக்கவும். தேவைக்கேற்ப வட்டம், சதுர வடிவில் மாவை தயாரித்து பிரெட் தூளில் புரட்டி எடுத்து பொரித்தால் சூடான கட்லெட் தயார்.lhA4LfS

Related posts

சுவையான சத்தான பீட்ரூட் சப்பாத்தி

nathan

கோதுமை அடை பிரதமன்

nathan

வாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல்

nathan

சத்து நிறைந்த கொள்ளு கார அடை

nathan

ஆப்பம் வீட்டில் தயாரிக்கும் முறை

nathan

ராஜ்மா சாவல்

nathan

சத்தான சம்பா கோதுமை ரவை அடை

nathan

சுவையான இறால் வடை செய்வது எப்படி

nathan

சூப்பரான காளான் பஜ்ஜி

nathan