25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1463219757 7218
சைவம்

விதவிதமான காளான் உணவுகளை தயார்செய்வது எவ்வாறு?

1. பெப்பர் காளான்

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – தேவையான அளவு
கடுகு, உளுந்து, கருவேப்பிலை – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் நறுக்கியது – 1
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகு தூள் – இரண்டு ஸ்பூன்
காளான் – நறுக்கியது – 250 கிராம்
உப்பு – தேவையான அளவு

1463219757 7218

செய்முறை:

* கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடவும். பின்பு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.

* பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நறுக்கிய காளானை இதோடு சேர்த்து வதக்கவும்.

* இரண்டு நிமிடம் கழித்து காளான் நன்றாக தண்ணீர் விடும். இப்பொழுது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, மூடி விடவும்.

* ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை காளானை நன்கு கிளறி விடவும். 15 நிமிடத்தில் தண்ணீர் முற்றிலும் வற்றி விடும். இப்போது அடுப்பை அணைத்து விட்டு மிளகு தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டால் தயார்.

2. காளான் டோஸ்ட்

தேவையான பொருட்கள்:

கோதுமை பிரட் – 4 துண்டுகள்
சீஸ் – 2 கட்டிகள் (துருவியது)
காளான் – 8 (நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

1463219791 1467

செய்முறை:

முதலில் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் பிரட் துண்டு களைப் போட்டு, இரண்டு பக்கங்களையும் பொன்னிறமாக டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், காளான் சேர்த்து 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் உப்பு சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

பின்பு அந்த கலவையை டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளின் மீது வைத்து, அதன்மேல் துருவிய சீஸை தூவி, மைக்ரோவேவ் ஓவனில் வைத்து, 2-3 நிமிடம் சீஸ் உருகும் வரை வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது ஈஸியான காளான் டோஸ்ட் ரெடி. இதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

3. காளான் கிரேவி

காளான் – 200 கிராம்
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 2
கிரீம் – அரை கப்
மல்லித் தளை – கால் கப் (பொடியாக நறுக்கியது)
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
வெண்ணெய் – சிறிது

1463219833 7217

செய்முறை:

* காளானை நான்கைந்து முறை மண் வாசனை போகக் கழுவி, சுத்தம் செய்து, விருப்பமான வடிவில் வெட்டவும்.

* பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.

* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் நெய் சூடாக்கி, அதில் வெங்காயத்தை வதக்கவும்.

* அது நன்கு சிவந்து வரும் போது, தக்காளி, இஞ்சி, மிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.

* பிறகு காளான் சேர்க்கவும். உப்பு சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி, காளான் வெந்து, கிரேவியாக வரும் போது, கிரீம் சேர்த்து இறக்கி, சிறிது வெண்ணெய் சேர்த்து, சப்பாத்தியுடன் பரிமறவும்.

Related posts

சுரைக்காய் கூட்டு

nathan

மீல் மேக்கர் கிரேவி செய்முறை விளக்கம்

nathan

தயிர்சாதம்

nathan

சுண்டைக்காய் வறுவல்

nathan

நெய் சாதம் வைப்பது எப்படி

nathan

சுவையான காலிஃப்ளவர் 65

nathan

பட்டாணி புலாவ்

nathan

வெங்காய தாள் கூட்டு

nathan

பாலக் பன்னீர்

nathan