26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
12
சிற்றுண்டி வகைகள்

ஹெல்த்தி மிக்ஸர்! ஈஸி குக்!

ஹெல்த்தி மிக்ஸர்

தேவையானவை

அவல் பொரி, அரிசிப் பொரி, கம்புப் பொரி போன்ற ஏதேனும் மூன்று பொரி வகைகள், கார்ன் ஃபிளேக்ஸ் – தலா 1/2 கப்

வறுத்த வேர்க்கடலை – 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க

பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – 2

கறிவேப்பிலை – 1 கொத்து

பொட்டுக் கடலை – 50 கிராம்

பெருங்காயம், மஞ்சள் தூள் – தலா 1/4 டீஸ்பூன்

பொடி சர்க்கரை – 1 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

12

செய்முறை

அவல், பொரியைத் தனித்தனியாக வாணலியில் கொட்டி இரண்டு நிமிடங்கள் சூடுபடுத்தி வதக்க வேண்டும். அவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றிவிட வேண்டும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பொட்டுக் கடலை, வேர்க்கடலை சேர்த்து வதக்க வேண்டும். பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய பின் அடுப்பை அணைத்துவிட வேண்டும். இந்தத் தாளிப்புடன் பொரி வகைகள், கார்ன் ஃபிளேக்ஸ், சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளற வேண்டும்.

பலன்கள்

உணவுப் பொருட்கள் எண்ணெயில் பொரிக்காமல், வறுக்கப்படுகின்றன. ஆகையினால், ஆரோக்கியமான நொறுக்குத் தீனியாக இவற்றைச் சாப்பிடலாம்.

பசியுடன் வரும் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த மிக்ஸரைத் தரலாம். குழந்தைகள், பெரியவர்கள்  என அனைவருக்கும் ஏற்றது.

Related posts

மெது போண்டா செய்வது எப்படி

nathan

குழந்தைகளுக்கான சில்லி கார்லிக் நூடுல்ஸ்

nathan

பூரி செய்வது எப்படி

nathan

சிக்கன் கட்லட்

nathan

மு‌ட்டை க‌ட்லெ‌ட்

nathan

சந்தேஷ்

nathan

ஜாலர் ரொட்டி

nathan

சுவையான பேபி கார்ன் 65 செய்வது எப்படி

nathan

பனீர் டிரையாங்கிள்

nathan