24.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201605280921025457 Important things to note when the child vaccinated SECVPF
மருத்துவ குறிப்பு

குழந்தைக்கு தடுப்பூசி போடும் போது கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள்

குழந்தைகளைத் தாக்கும் நோய்த் தொற்றில் இருந்து காப்பதோடு மட்டுமல்ல, குழந்தைகள் ஊனமாகி உயிர் இழப்பதில் இருந்தும் தடுப்பூசிகள்தான் தற்காக்கின்றன.

குழந்தைக்கு தடுப்பூசி போடும் போது கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள்
தடுப்பூசி நம் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்கிறது! தவிர, நோய்த் தொற்றுக்கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வரும்கால தலைமுறையைப் பாதுகாக்கிறது.

சில தடுப்பூசி தருணத்தில் குழந்தை எதிர்கொள்ளும் சங்கடம் இயல்பானதே. தடுப்பூசி போட்டதுமே குழந்தைக்கு காய்ச்சல் மாதிரியான சிறு உபத்திரவங்கள் தலைகாட்டலாம். காய்ச்சல் அதிகமாக இருந்தால், டாக்டர் தரும் மாத்திரைகளைப் பயன்படுத்தினால் போதும்.

 தடுப்பூசி போடவேண்டிய காலகட்டத்தில் குழந்தைக்கு ஏதேனும் சளி, காய்ச்சல் அல்லது வேறு எதாவது உடல் நலப்பிரச்சனை இருந்தால் அதைப் பற்றிக் கவலை வேண்டாம். தடுப்பூசியைத் தள்ளிப்போடவும்வேண்டாம். குழந்தைக்கு உள்ள உடல் நலப்பிரச்சனைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனைபடி நடப்பதே நல்லது.

 குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு இருக்கும்போது போலியோ சொட்டு மருந்து போடவேண்டாம். அதேபோல் கடுமையான காய்ச்சல் அல்லது அலர்ஜி ஏற்பட்டிருந்தால் தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கலாம்! டாக்டரின் ஆலோசனையைப் பெற்று, முதலில் அவற்றைச் சரிபடுத்திய பிறகு தடுப்பூசி அளிக்க வேண்டும்.

 மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இடைவெளி மிகவும் முக்கியமானது. அதிலும் நான்கு வார இடைவெளியில் டி.பி.டி. தடுப்பூசி மற்றும் ஓ.பி.வி. சொட்டு மருந்து போடவேண்டும் என்பது அவசியம்.

 எல்லா தடுப்பூசியும் முழுதாகப் போடப்பட்ட குழந்தைகளுக்கு சிறு சிறு காயங்களுக்கு டிடி (டெட்டனஸ் டாக்ஸாய்ட்) கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. டி.பி.டி. பூஸ்டர் மீதம் இருக்கும்போது குழந்தைக்கு காயம் ஏற்பட்டால், ஏற்கெனவே போடப்பட்ட பூஸ்டர் டோஸ் டெட்டனசில் இருந்து உங்கள் குழந்தைக்குப் போதுமான பாதுகாப்பை அளிக்கும்.

 குழந்தைக்கு ஊசி போட புட்டத்தை விட தொடையே சிறந்த இடம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட ஊசியைப் பயன்படுத்துதல் கூடாது. பெற்றோர்கள் இதை உறுதிப்படுத்துவது நல்லது. ஊசிப் போட்ட இடத்தில் சில குழந்தைகளுக்கு சிறு வீக்கம் தென்படும். இது பிரச்னையும் இல்லை. அதற்கு க்ரீம், மருந்து போடத்தேவையும் இல்லை.201605280921025457 Important things to note when the child vaccinated SECVPF

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த சாறு சிறுநீரக கற்களை வேகமாக கரைக்க உதவுகிறதாமே!

nathan

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?

nathan

அரிப்பை குறைக்க உதவும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்!

nathan

நீங்க தவறாம ஃபாலோ பண்ணா போதும்.. சீக்கிரமா உங்க எடை குறையுமாம்…!

nathan

சூப்பர் டிப்ஸ்! இதயத்தை பலப்படுத்தணுமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

குட்டீஸ் சுட்டீஸ் – அதிகம் தாக்கும் 6 பிரச்னைகள் பேரன்டிங் கைடு!!

nathan

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை தீவிரமாக இருப்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!

nathan

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா கூடாதா?

nathan

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா?அப்ப இத படிங்க!

nathan