சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் சிறுதானிய கார குழிப்பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சிறுதானிய கார குழிப்பணியாரம் செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி – 1/4 கிலோ,
சாமை – 150 கிராம்,
குதிரைவாலி – 100 கிராம்,
உளுந்து – 200 கிராம்,
கடலைப் பருப்பு – 50 கிராம்,
பெரிய வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காய்த்தூள் – சிறிதளவு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
* வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இட்லி அரிசி, சாமை, குதிரைவாலி அரிசி, உளுந்தை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைத்த பின் இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து மாவில் கொட்டவும்.
* கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக மாவை கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
* குழிப்பணியார கல்லை அடுப்பி வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி மாவை குழியில் ஊற்றவும்.
* வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
* சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் சிறுதானிய கார குழிப்பணியாரம் ரெடி.