29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
hip pain can affect you These diseases
மருத்துவ குறிப்பு

இடுப்பு வலி வந்தால் ஆண்களை இந்த நோய்கள் தாக்கும்

ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வந்தால், அது நம் உடலில் உள்ள ஏதோ ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டுகிறது என்று அர்த்தம்.

இடுப்பு வலி வந்தால் ஆண்களை இந்த நோய்கள் தாக்கும்
பலரும் இடுப்பு வலி வந்தால், நீண்ட நேரம் அமர்வதால் தான் என அதனை சாதாரணமாக எண்ணி விட்டுவிடுவார்கள். ஆனால் அடிக்கடி இடுப்பு வலி வந்தால், அது நம் உடலில் உள்ள ஏதோ ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டுகிறது என்று அர்த்தம். குறிப்பாக ஆண்கள் மருத்துவரிடம் செல்ல பயந்து, இம்மாதிரியான வலிகளை கண்டு கொள்ளமாட்டார்கள்.

கடுமையான இடுப்பு வலியுடன், சிறுநீர் கழிக்கும் போது வலியை உணர்ந்தால், அது சிறுநீர்ப்பாதை தொற்றுக்கான அறிகுறிகளுள் ஒன்று. சிறுநீர்ப்பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால், அது சிறுநீரகங்களை மோசமாக பாதிக்கும்.

இடுப்பு வலியுடன், வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் இருப்பின், அது பெருங்குடல் அழற்சிக்கான அறிகுறியாகும். இந்நிலை இப்படியே நீடித்தால், அது உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி பாதித்துவிடும். எனவே ஆரம்பத்திலேயே இந்த அறிகுறி தெரிந்தால், மருத்துவரை அணுகுங்கள்.

வயதான காலத்தில் இடுப்பு வலி வந்தால், அது ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாகும். எனவே தவறாமல் மருத்துவரை சந்தித்து, பிரச்சனையைக் கூறி தீர்வு காணுங்கள்.

உங்களுக்கு வலது பக்க அடிவயிறு கடுமையாக வலித்து, காய்ச்சல், வாந்தி போன்றவை இருந்தால், அது குடல் வால் அழற்சி இருப்பதை உணர்த்துகிறது என்று அர்த்தம். இந்த அழற்சியைத் தடுக்க ஒரே வலி, அறுவை சிகிச்சையின் மூலம் நீக்குவது தான்.

உங்களுக்கு பால்வினை நோய்கள் உள்ளது என்பதை வெளிப்படும் அறிகுறிகளுள் ஒன்று இடுப்பு வலி. அதிலும் மேக வெட்டை நோய் மற்றும் கிளமீடியா போன்றவை இருந்தால், இடுப்பு வலி ஏற்படும். ஆகவே இம்மாதிரியான வலியை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். இல்லாவிட்டால், இந்நோய் உங்கள் துணைக்கும் பரவிவிடும்.hip pain can affect you These diseases

Related posts

தெரிஞ்சிக்கங்க…இந்த ஒரு அருமருந்து நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும்!

nathan

தெரிந்து கொள்ளுங்கள்! கண்பார்வை குறைவதற்கான காரணங்கள் !

nathan

கட்டாயம் இதை படியுங்கள் குழந்தைகளைக் குறிவைக்கும் `டிப்தீரியா’… அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சைகள்!

nathan

உங்களுக்கு அடிக்கடி குமட்டல் வருகிறதா?கவணம் மாரடைப்பிற்கான அறிகுறியா!!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த மூலிகையை முறையில் 1 மண்டலம் சாப்பிட்டு வந்தால் நோய் என்னும் காலன் நெருங்காது!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… பி ரா அணி யாமல் இருப்பது நல்லது என்பதற்கான சில ஆரோக்கியமான காரணங்கள்!!!

nathan

கண்புரைக்கு புதிய சிகிச்சை!

nathan

தரமான சானிட்டரி பேட் பயன்படுத்துங்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உடலில் சில பகுதிகளில் அங்காங்கே மருக்கள் இருக்கா? இந்த சாறை தடவுங்க!

nathan