பிறந்த குழந்தைகள் அழுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எதற்காக குழந்தை அழுகின்றது என கண்டுபிடிப்பது தாய்மார்களுக்கு சிரமமான விஷயமாகும். அதுவும், முதல் முறை குழந்தை பெற்றுள்ள தாய்க்கு இது மிகவும் சிரமம் என்றே கூறலாம். பொதுவாக குழந்தை அழுவதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்கும் ஒன்று பசி மற்றொன்று வயிறு வலி அல்லது வயிற்று சூடு.
பசி காரணமாக இருந்தால் தாய் பால் கொடுத்து பசியை ஆற்றிவிடலாம். அப்படியும் குழந்தை தொடர்ந்து அழுகிறது என்றால் வயிறு சார்ந்த பிரச்சனையாக தான் இருக்கும். பிறந்த குழந்தைகளுக்கு மத்தியில் இது மிகவும் இயல்பான ஒன்று தான். பொதுவாக குழந்தையின் வயிற்று பகுதி மிகவும் சூடாக உணரப்பட்டால், வயிற்று வலியினால் தான் குழந்தை அழுகிறது என்று எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
பிறந்த குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே செயற்கை மருந்து கொடுத்து பழக்குவது தவறான அணுகுமுறை ஆகும். இது போன்ற சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியமும், பாட்டி வைத்தியமும் செய்தாலே போதுமானது. அதும், வயிற்று வலிக்கு தீர்வு காண உங்கள் சமையல் அறையிலேயே மருந்துகள் இருக்கும் போது எதற்கு இரசாயன மருந்துகளை தேடி ஓட வேண்டும்….
பெருங்காயம்
பெருங்காயத்தை சிறிதளவு எடுத்து தண்ணீரில் கலந்து பசைப் போன்று ஆக்கிக் கொள்ளவும். பின்பு குழந்தையின் வயிற்று பகுதியில் மென்மையாக சுழற்சி முறையில் தடவி மசாஜ் போல செய்யவும். இது, குழந்தையின் உடல் சூட்டை தனித்து வயிற்று வலியை உடனடியாக குறைக்க உதவும்.
ஓமம்
சிறுதளவு ஓமத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கும் அளவு காய்ச்சவும். காய்ச்சிய பின், நன்கு குளிர வைக்கவும். அந்த நீரை காற்று புகாத வண்ணம் பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு வயிற்று வலி என்று தெரியும் போது டீ ஸ்பூன் அளவில் கொடுத்து வந்தால் வலி குறையும்.
பெருஞ்சீரகம்
ஓமம் போலவே, பெருஞ்சீரகத்தையும் அதே முறையில் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். இது, வயிற்று சூட்டை குறைத்து குளுமை அடைய செய்யும். வயிற்று வலி மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகளையும் குறைக்கவும் உதவும். இந்த நீரை காற்று புகாதபடி பாட்டிலில் அடைத்து வைக்க வேண்டுவது மிகவும் முக்கியமானது ஆகும்.
உலர்ந்த திராட்சை
குழந்தைக்கு வயிற்று வலி அதிகமாக இருக்கின்றது என்று நீங்கள் உணர்ந்தால் உலர்ந்த திராட்சையை தரலாம். இது, வயிற்று வலியை போக்க வல்லது ஆகும்.
பேக்கிங் சோடா
சிறிதளவு பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் போல குலைத்துக் கொள்ளவும். பின் அந்த பேஸ்ட்டை உங்கள் குழந்தையின் வயிற்று பகுதியில் மெல்ல மென்மையாக சுழற்சி முறையில் மசாஜ் போல செய்து வந்தால், வயிற்று வலி குறையும்.