30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
19 1463649206 7 aloevera
சரும பராமரிப்பு

வெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும்?

ஒவ்வொருவரும் மற்றவர்கள் முன்பு அழகாக காட்சியளிக்க வேண்டுமென்று நினைப்போம். அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்வோம். குறிப்பாக சற்று கருப்பாக இருப்பவர்கள், வெள்ளையாவதற்கு பல முயற்சிகளை எடுப்பார்கள். மேலும் வேறு வழிகள் ஏதேனும் உள்ளதா என்றும் தேடுவார்கள்.

நீங்களும் அப்படி வெள்ளையாக வழிகளைத் தேடுபவரா? அப்படியெனில் எளிதில் கிடைக்கும் கற்றாழையைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போடுங்கள். கற்றாழை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான பொருள். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகளும் விரைவில் நீங்கும்.

சரி, இப்போது வெள்ளையாவதற்கு கற்றாழையைக் கொண்டு எப்படியெல்லாம் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போம்.

ஃபேஸ் பேக் #1

சிறிது கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமைகள் அகலும்.

ஃபேஸ் பேக் #2

ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவும் முன், சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முதுமைப் புள்ளிகள் போன்றவை மறைந்து, முகமும் பொலிவோடு காணப்படும்.

ஃபேஸ் பேக் #3

இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு பொருந்தமானவை. அதற்கு கற்றாழை இலையை எடுத்து, அதன் கூர்மையான முனைகளை கத்தியால் நீக்கிவிட்டு, நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

ஃபேஸ் பேக் #4

உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால் கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் ரோஸ் ஆயில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, முகத்தின் பொலிவை அதிகரிக்கும்.

ஃபேஸ் பேக் #5

இந்த ஃபேஸ் பேக் வறட்சியான சருமத்திற்கு ஏற்றது. அதற்கு கற்றாழை ஜெல்லுடன், காட்டேஜ் சீஸ், பேரிச்சம் பழம் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

ஃபேஸ் பேக் #6

இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை அதிகரிப்பதோடு, முகத்தை புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் வெளிக்காட்டும். அதற்கு கற்றாழை ஜெல்லுடன் மாம்பழ கூழ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஃபேஸ் பேக் #7

வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.19 1463649206 7 aloevera

Related posts

பயத்தம்பருப்பு ஃபேஸ் பேக்கைப் போட்டுப் பாருங்கள்….

nathan

மழைக்காலத்தில் உடல் பராமரிப்பு

nathan

Beauty tips .. அழகுக்கு அழகு சேர்க்க!!!! இந்த ஒரு மாத்திரை போதும்….

nathan

உங்களுக்கு தெரியுமா பாருங்கள் பாத வெடிப்பு வராமல் தடுப்பது எப்படி?

nathan

கருப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம்..

nathan

எண்ணெய் பசை சருமத்தை உடையவர்கள் பளபளப்பான சருமத்தை பெறுவதற்கான வழிகள்!…..

nathan

சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்க வேண்டுமா?

nathan

சென்ஸிடிவ் சருமத்தினை அழகாக்கும் வாழைப்பழ ஸ்க்ரப்

nathan

திராட்சைகளையும் அழகை மெருகூட்ட பயன்படுத்தலாம்

nathan