25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
201605241418084347 How to make spicy roast crab SECVPF
அசைவ வகைகள்

ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படி

ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படி
தேவையான பொருள்கள் :

நண்டு – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
தக்காளி – 50 கிராம்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
சோம்பு – சிறிதளவு

செய்முறை :

* நண்டை நன்றாக சுத்தம் செய்து நீரை வடித்து வைக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* ஒரு அடி அகலமானக் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கிய பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். காரம் விரும்புவோர் மிளகாய்த்தூளை கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.

* அடுத்து அதில் நண்டு சேர்த்துக் மசாலா நண்டு முழுவதும் படுமாறு நன்றாகக் கிளறிவிடவும்.

* பிறகு அதில் கால் டம்ளர் அளவிற்குத் தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும். இடையிடையே பிரட்டி விடவும். தண்ணீர் முழுவதும் வற்றி, நண்டு வெந்து வாசனை வந்த பிறகு இறக்கவும். நண்டு விரைவில் வெந்து விடும்.

* நண்டு வறுவல் ரெடி.

* இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாகப் பொருந்தும்.

குறிப்பு

* நண்டு கிரேவியாக வேண்டுமானால் மேலும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். நண்டு வறுவலை வெங்காயம், தக்காளி, பூண்டு இவை சேர்க்காமலும் சுவையாகச் செய்யலாம். அதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து நண்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் வற்றும் வரை அடிக்கடி கிளறிவிட்டு வேக வைக்க வேண்டும்.201605241418084347 How to make spicy roast crab SECVPF

Related posts

நாட்டு ஆட்டு குருமா

nathan

சில்லி இறால் வறுவல் : செய்முறைகளுடன்…!

nathan

சிக்கன் லெக் ப்ரை

nathan

முட்டை தக்காளி குழம்பு

nathan

சுவையான தக்காளி மீன் வறுவல்!….

sangika

முட்டை ப்ரைடு ரைஸ் – எளிய முறையில் செய்வது எப்படி

nathan

மாட்டிறைச்சி பிரியாணி செய்முறை ,மாட்டிறைச்சி பிரியாணி எப்படி சமைக்க வேண்டும்,tamil samayal biryani,tamil easy samayal

nathan

இறால் கறி

nathan

ருசியான மட்டன் சுக்கா!! சுவையாக செய்வது எப்படி!!

nathan