27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
201605241151071067 how to make rava laddu SECVPF
இனிப்பு வகைகள்

ரவா லட்டு செய்வது எப்படி

சுவையான ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ரவா லட்டு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

ரவை – 1 டம்ளர்
சர்க்கரை – 2 1/4 டம்ளர்
நெய் – அரை டம்ளர்
முந்திரிப்பருப்பு – 10
ஏலக்காய் – 4 (பொடித்தது)

செய்முறை :

* ரவையை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுக்கவும்.

* நெய்யில் முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

* வறுத்த ரவையை ஆற விட்டு, பின் மிக்சியில் போட்டு திரித்துக் கொள்ளவும்.

* அடுத்து அதில் ரவையுடன் சர்க்கரையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.

* திரித்த ரவையுடன் பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பைச் சேர்க்கவும்.

* இந்த மாவை சிறிது சிறிதாக சூடான நெய் விட்டுப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

* உருண்டைப் பிடிக்க வரவில்லையென்றால் சிறிது சூடான பாலைத் தெளித்தும் உருண்டைகள் செய்யலாம்.

குறிப்பு :

* பாலைச் சிறிது சிறிதாகத் தெளித்தே மாவை உருண்டை பிடிக்க வேண்டும். அதிகம் பால் விட்டால் கொழகொழத்து உருண்டை பிடிக்க வராது.

* ரவையை நன்கு சிவக்க வறுக்க வேண்டும். இல்லையென்றால் பச்சை வாடை அடித்து சுவையைக் கெடுத்து விடும்.201605241151071067 how to make rava laddu SECVPF

Related posts

சுவையான ரவா பணியாரம்

nathan

சுவையான பாதுஷா நீங்களும் செய்யலாம்!…

sangika

குலோப் ஜாமுன்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பொரி உருண்டை

nathan

மிக்க சுவையான எள்ளு உருண்டை

sangika

இனிப்பு சோமாஸ்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான ஹாட் சாக்லேட்

nathan

சுவையான அவல் கேசரி- ருசியாக செய்யும் எளிய முறை

nathan

பயற்றம் உருண்டை// பயற்றம் பணியாரம்..

nathan