உருளைக்கிழங்குகள், தோலின் நிறத்தை வெளிறச் செய்து, கருவளையங்களை குறைக்கின்றன.
கண்களுக்கு கீழே வரும் கருவளையத்தை போக்கும் உருளைக்கிழங்கு
கருவளையங்களை போக்க இயற்கையான தீர்வுகளை முயற்சி செய்யலாம். உருளைக்கிழங்குகள், தோலின் நிறத்தை வெளிறச் செய்து, கருவளையங்களை குறைக்கின்றன.
ஒரு நடுத்தர அளவுள்ள உருளைக்கிழங்கை எடுத்து, அதை நன்றாக கழுவவும். அதன் தோலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருப்பதால், தோலை உறிக்காதீர்கள். இப்போது உருளைக் கிழங்கை இரண்டு பாதியாக வெட்டவும். அதில் ஒரு துண்டை, 3-4 அங்குல துண்டுகளாக வெட்டுங்கள். இந்த துண்டுகளை பிரிட்ஜ்ஜில், 20 நிமிடங்கள் வைத்திருந்து, பின் உங்கள் கண்களின் மேல், 5 நிமிடங்களுக்கு அந்த துண்டுகளை வைத்திருங்கள். சிறந்த பலன் பெற தொடர்ந்து, 10 நாட்களுக்கு செய்யுங்கள்.
வீட்டில் பிரிட்ஜ் இல்லையெனில், உருளைக் கிழங்கு சாற்றையும் உபயோகிக்க முடியும். ஒரு சிறிய அளவுள்ள உருளைக்கிழங்கை துருவி, அதில் இரண்டு ஸ்பூன் எடுத்து அதை பிழிந்து சாறு எடுக்கவும். ஒரு பஞ்சின் உதவியுடன், இந்த சாற்றை உங்கள் கண்களைச் சுற்றி தடவுங்கள். அது காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதை படுப்பதற்கு முன் வழக்கமாக செய்து வந்தால், கருவளையங்களை வெளிற வைத்து விடும். ஆலிவ் எண்ணெய், தோலை இறுக்கமாக வைக்கவும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.