26.8 C
Chennai
Monday, Nov 18, 2024
201605231130077391 How to make delicious thayir vadai SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான தயிர் வடை செய்வது எப்படி

சுவையான தயிர் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான தயிர் வடை செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு – 1 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு சிறு துண்டு
தேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – ருசிக்கேற்றவாறு
எண்ணெய்
தயிர் – 2 கப்

அலங்கரிக்க :

கொத்துமல்லி தழை – சிறிது (பொடியாக நறுக்கியது)
கேரட் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
காராபூந்தி அல்லது ஓமப்பொடி – தேவைக்கு

செய்முறை :

* உளுத்தம் பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து நன்றாக மை போல் அரைக்கவும். வழித்தெடுக்குமுன் உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* தேங்காய்த்துருவல், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை தனியாக அரைத்துக் கொள்ளவும்.

* தயிரை நன்றாகக் கடைந்து, அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, இலேசாக விரல்களால் அழுத்தி நடுவில் துளையிட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

* பொரித்தெடுத்த வடையை குளிர்ந்த நீரில் போட்டு ஓரிரு நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து இலேசாக கைகளால் அழுத்தி அதிலுள்ள நீரை அகற்றி விட்டு தயிரில் போட்டு 20 முதல் 30 நிமிடங்கள் ஊற விடவும்.

* பரிமாறும் முன் அதன் மேல் காராபூந்தி அல்லது ஓமப்பொடி, கேரட், கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.201605231130077391 How to make delicious thayir vadai SECVPF

Related posts

கோதுமை ரவை வெஜிடபிள் புட்டு

nathan

பொங்கல் ஸ்பெஷல்: கோதுமை ரவை இனிப்பு பொங்கல்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு போண்டா

nathan

இலகுவான அப்பம்

nathan

பேபி கார்ன் பஜ்ஜி

nathan

கோதுமை ரவை பாயசம்

nathan

பீர்க்கங்காய் தோல் துவையல்!

nathan

அவல் தோசை

nathan

ஸ்டஃப்டு குடை மிளகாய்

nathan