27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
201605231416453297 how to make mango kulfi SECVPF
ஐஸ்க்ரீம் வகைகள்

குளுகுளு மாம்பழ குல்ஃபி செய்வது எப்படி

குளுகுளு மாம்பழ குல்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குளுகுளு மாம்பழ குல்ஃபி செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:

மாம்பழ விழுது (தோல் நீக்கி அரைத்தது) – 1 கப்
மாம்பழ துண்டுகள் – 1 கப்
பால்- 1 லிட்டர்
மில்க் மைட் – 100 மில்லி
சர்க்கரை – 150 கிராம்
துருவிய பாதாம், பிஸ்தா, முந்திரி – 1/2 கப்
ஏலக்காய் துள் – சிறிய சிட்டிகை
பால்கோவா – 1/4 கப் (தேவைபட்டால் )
குங்குமப்பூ – சிறிய சிட்டிகை
சோளமாவு – சிறிதளவு

செய்முறை :

* சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.

* பால் பாதியாக சுண்டியதும் சக்கரையை சேர்த்து நன்கு கிளறவும்.

* அடுத்து இதனுடன் மில்க் மைட் மற்றும் பால்கோவா சேர்த்து நன்கு கிளறவும்..

* நன்கு கொதித்து ஒரு பதத்திற்கு வந்ததும் மாம்பழ விழுதை சேர்த்து மிதமான தீயில் தொடர்ந்து காய்ச்சவும்.

* பின் அதில் துருவிய பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் தூள் மற்றும் குங்கும பூ சேர்க்கவும்.

* சிறிது நேரத்துக்கு பிறகு பேஸ்ட் போன்ற பதத்திற்கு வருவதற்கு சிறிதளவு கரைத்த சோளமாவை சேர்த்து கிளறவும்.

* இறுதியாக நறுக்கிய மாம்பழ துண்டுகள் சேர்த்து இறக்கவும்.

* இதை சற்று நேரம் ஆற வைத்து குல்ஃபி கோப்பைகளில் ஊற்றி 6 முதல் 8 மணி நேரம் வரை பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

* குளுகுளு மாம்பழ குல்ஃபி ரெடி.201605231416453297 how to make mango kulfi SECVPF

Related posts

சாக்லெட் புடிங்

nathan

கோக்கோ ஐஸ்கிரீம்

nathan

குழந்தைகளுக்கான குளுகுளு கிவி ஐஸ்க்ரீம்

nathan

வெண்ணிலா ஐஸ் கிரீம் வித் ஜெல்லி

nathan

வரகு அரிசி ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

nathan

சுவையான வெனிலா ஐஸ்கிரீம்

nathan

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan

குல்பி

nathan

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம்

nathan