28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
201605180749343015 Ways to impress your wife SECVPF
மருத்துவ குறிப்பு

உங்கள் மனைவியை மகிழ்விக்கும் வழிகள்

பலர் விவாகரத்து நோக்கி செல்வதற்கான முக்கிய காரணம், தம்பதி மத்தியில் இருக்கும் புரிதல் இன்மை தான்.

உங்கள் மனைவியை மகிழ்விக்கும் வழிகள்
நீங்கள் சம்பாதிக்கும் பணத்திலோ, அதைக் கொண்டு நீங்கள் வாங்கி தரும், புடவை, நகை, ஃபேஷன் உபகரணங்கள் போன்ற பரிசுகளையும் தாண்டி. நீங்கள் அவருடன் செலவழிக்கும் நேரம் தான் மனைவிகள் அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பரிசு. இதை இந்த தலைமுறையில் பல ஆண்கள் புரிந்துக் கொள்வதில்லை.

இந்நாட்களில் பலர் விவாகரத்து நோக்கி செல்வதற்கான முக்கிய காரணம், தம்பதி மத்தியில் இருக்கும் புரிதல் இன்மை தான். இந்த புரிதல், ஒருவர் பற்றி ஒருவர் அறியாதிருப்பது போன்றவை உண்டாக காரணியாக இருப்பது சரியாக நேரம் ஒதுக்கி பேசாமல் இருப்பது தான். இதுப் போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்கவும், உங்கள் மனைவியை மகிழ்விக்கவும் உதவும் வழிகளை பார்க்கலாம். .

பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், வீடு துடைத்தல் என எந்த வேலையாக இருந்தாலும், சின்ன சின்ன உதவிகள் செய்துக் கொடுக்க மறக்க வேண்டாம். இந்த சின்ன வேலை உதவிகள் உங்கள் மனைவியை பெருமளவு மகிழ்ச்சியடைய உதவும் என்பதில் துளியும் சந்தேகம் தேவையில்லை.

மேலும், நீங்கள் இது போன்ற வேலைகள் செய்துக் கொடுப்பதை தம்பட்டம் அடித்து தோழிகளிடம் பெருமையாக கூறி மகிழ்ச்சி அடைகிறார்கள் மனைவிகள். இந்த மகிழ்ச்சியை உங்கள் மனைவிக்கு நீங்கள் தந்தே ஆகவேண்டும்.

தேவையான போது மட்டும் முன்னுரிமை அளித்து, பிறகு அவர்களை பின் தள்ளி நிப்பாட்டுவதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கையில் எந்த கட்டத்திலும், எந்த சூழலிலும் நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டிய முதல் நபர் உங்கள் மனைவி.

உங்கள் தொழில், வேலை சார்ந்து மட்டுமில்லாமல், உங்கள் மனைவியின் வேலை சார்ந்தும் சற்று ஆர்வம் செலுத்துங்கள். வேலை ரீதியாக அவர் முன்னேற்றம் அடைய என்ன செய்யலாம் என அறிவுரைக் கூறுங்கள்.

உங்கள் இருவருக்கு மத்தியிலான ஒரு செய்கை பாசையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். செய்கை, சத்தம் போன்ற ஏதேனும் ஒன்று சுயமாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வபோது இந்த முறையில் உரையாட முயற்சி செய்யுங்கள். இதுபோன்ற சில விஷயங்கள் அவர்கள் அதிகமாக மகிழ்ச்சியடைய உதவும்.

முக்கியமாக நேரம் ஒதுக்குங்கள். வேலையே கதி என இருக்க வேண்டும். வீடும், இல்லறமும் கூட முக்கியம். இரண்டையும் இரு கண்களாக பாவியுங்கள். அப்போது தான் இல்லறமும் சிறக்கும், தாம்பத்தியமும் சிறக்கும்.201605180749343015 Ways to impress your wife SECVPF

Related posts

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள்

nathan

சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?

nathan

மாமியார் vs மருமகள்: உளவியல் சொல்லும் தீர்வு என்ன ?

nathan

கதாநாயகனை நினைத்துக்கொண்டு கணவரோடு வாழும் மாய வாழ்க்கை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா?

nathan

கற்பக தருவான கல்யாண முருங்கை

nathan

உங்களுக்கு தெரியுமா பாலுடன் இவற்றையெல்லாம் சேர்த்து சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடுமாம்..!

nathan

ஆரோக்கியத்தை மேம்படுத்த வெந்தய டீ ….

sangika

எச்சரிக்கை! உங்களுக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

nathan