25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201605211410011242 aatukal paya mutton leg paya Mutton Trotters SECVPF
அசைவ வகைகள்

சுவையான ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி

சுவையான ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சன்டே சமையலில் இதை செய்து பாருங்கள்.

சுவையான ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி
தேவையானப் பொருட்கள் :

வேக வைக்க :

ஆட்டுக்கால் – 4
வெங்காயம் – 3
தக்காளி – 2
பச்சை மிளக்காய் – நான்கு
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 மேசைக்கரண்டி
மிளகு தூள் – 2 தேக்கரண்டி
தனியாத்தூள் – 2 மேசைகரண்டி
உப்பு – தே. அளவு
தேங்காய் – அரை மூடி

தாளிக்க :

எண்ணெய்
பட்டை, ஏலம், கிராம்பு – தலா இரண்டிரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி – ஒரு கொத்து
புதினா – சிறிதளவு

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தேங்காயை நைசாக அரைத்து கொள்ளவும்.

* ஆட்டுக்காலை நல்ல தேய்த்து கழுவி அதில் உள்ள அழுக்கு, முடி எல்லாம் எடுத்த பின் நன்றாக கழுவி,

* குக்கரில் ஆட்டுக்கால் , நறுக்கிய முக்கால் பாகம் வெங்காயம், நான்கு மேசைகரண்டி இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, உப்பு தூள், மிளகு தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு அனைத்தையும் போட்டு கிளறி நான்கு பெரிய டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் போட்டு பதினைந்து நிமிடம் அதிக தீயிலும், பதினைந்து நிமிடம் சிம்மிலும் வேகவைத்து இறக்கவும்.

* விசில் போனதும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டு கொதிக்கவிடவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின் மீதம் உள்ள வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி மீதமுள்ள இஞ்சிபூண்டு பேஸ்டும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி கொத்தமல்லி, புதினா சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் கொதித்து கொண்டிருக்கும் ஆட்டு கால் பாயாவில் கொட்டி இறக்கவும்.

* கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

* சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி.

* ஆட்டுக்காலில் கொழுப்பு அதிக இருக்கும். ஆகையால் எண்ணெய் கம்மியா ஊற்றினால் போதும்.

* இதை இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையான இருக்கும்.201605211410011242 aatukal paya mutton leg paya Mutton Trotters SECVPF

Related posts

நாட்டு ஆட்டு குருமா

nathan

காடை வறுவல் செய்முறை விளக்கம்

nathan

கிராமத்து கோழி குழம்பு

nathan

சிக்கன் – காலிஃப்ளவர் மசாலா: வீடியோ இணைப்பு

nathan

மீன் வறுவல்

nathan

கடாய் பன்னீர் கிரேவி

nathan

ஆலு மட்டர் – (உருளைக்கிழங்கு பட்டாணி கறி)

nathan

மட்டன் கடாய்

nathan

உருளைக்கிழங்கு மட்டன் மசாலா செய்வது எப்படி

nathan