27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
17 20 1463742230
சரும பராமரிப்பு

உங்கள் சருமம் நிறமிழந்து உள்ளதா? இதோ ஈஸியான ஒரு தீர்வு!

நமது உடலில் சரும நிறத்தினை கட்டுப்படுத்துவது மெலனின் என்ற நிறமி ஆகும். அது சருமத்தில் சில சமயங்களில் அதிகமாய் அல்லது குறைவாய் உற்பத்தியானால் சரும பிரச்சனைகள் தோன்றும்.

இப்படி ஒழுங்கற்ற மெலனின் உற்பத்தியால் சருமம் நிறமிழந்து காணப்படும். அதனால்தான் கரும்புள்ளி, மங்கு, நிறம் மங்குதல் என சருமம் பாதிக்கும் இப்படி சீரற்ற மெலனின் உற்பத்திக்கு நமது சுற்றுப்புற சூழலும் ஒரு வகையில் காரணம்.

அதிக நேரம் சூரிய ஒளியில் இருந்தால் அதிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களால் மெலனின் உற்பத்தி பாதிக்கபடும். மேலும் ஹார்மோன் மாற்றங்கள், கொழுப்புமிக்க உணவுகளை உண்ணுதல் என இவைகளும் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணம்.

இந்த மாதிரியான சருமத்தில் என்ன மேக்கப் செய்தாலும் முகம் களையிழந்து காணப்படும் என்பது உண்மை. இதனை எவ்வாறு போக்கலாம் என்று இந்த அழகுக் குறிப்பின் மூலம் காணலாம்.

நிறைய மெனக்கெட தேவையில்லை. சிம்பிளான இரு பொருட்கள் மட்டும் போதும். கடைகளில் விலையுயர்ந்த க்ரீம்களை வாங்குவதை உடனே நிறுத்தி விட்டு இந்த குறிப்பினை நீங்கள் உபயோகப்படுத்தினால், மாசற்ற அழகினைப் பெறலாம்.

அதற்கு தேவை உங்கள் வீட்டில் இருக்கும் தேங்காய் நீரும் பால் பவுடர் மட்டும்தான். இது ஈஸியாய் வீட்டில் இருக்கும்தானே? இவற்றைக் கொண்டு இழந்த அழகினை எப்படி மீட்பது எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: தேங்காய் நீர்- கால் கப் பால் பவுடர் -2 டீஸ்பூன்

தேங்காய் நீரில், பால் பவுடரை நன்றாக கலந்து முகத்தில் பேக்காக போடவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவுங்கள். தினமும் இதனை செய்யலாம்.

நாளடைவில் முகத்தில் இருக்கும் தழும்புகள், தேமல் ஆகியவை போய் சருமத்திற்கு உயிரோட்டம் கிடைக்கும்.

தேங்காய் நீர் கொலாஜனை அதிகரிக்கச் செய்து, அங்குள்ள பாதிப்படைந்த திசுக்களை சரி செய்கிறது. செல்கள் நன்றாக செயல்பட்டால், அங்குள்ள மெலனின் உற்பத்தி நார்மலாகும். இதனால் சருமத்தில் ஏற்படும் நிற மாற்றங்கள் காணாமல் போய், சீராகும்.

பால்பவுடர் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது. அங்குள்ள தேவையற்ற தொற்றுக்களை நீக்கி, அழுக்குகளை வெளியேற்றுகிறது. முகப்பருக்களை வராமல் காக்கிறது.தழும்புகளை மெல்ல போக்குகிறது.

இந்த அழகுக் குறிப்பினை தொடர்ந்து செய்தால் உங்கள் சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்டு நீங்களே வியப்பீர்கள். சருமத்திற்கு மினுமினுப்பை இந்த கலவை அதிகரிக்கச் செய்யும். நீங்களும் வீட்டில் முயன்று பாருங்கள். அழகாய் இளவரசியாய் மாறலாம்.

17 20 1463742230

Related posts

கழுத்து கருமையை போக்கும் ஆரஞ்சு

nathan

குளிர் காலத்துலயும் சருமம் பட்டு போல மாறனுமா? இந்த ஹெர்பல் க்ரீம் யூஸ் பன்ணுங்க

nathan

உங்கள் சருமம் என்றும் 16 ஆக ஜொலிக்க அவகாடோவை பயன்படுத்தும் வழிகள் தெரியுமா!!

nathan

உங்களுக்கு தெரியுமா எந்த வகை சருமத்தினர் எலுமிச்சையை எந்த முறையில் பயன்படுத்தலாம்!!

nathan

இத படிச்சா.. இனிமேல் வாழைப்பழ தோலை தூக்கி போடவே மாட்டீங்க…

nathan

வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

nathan

மழைக்கால சரும வறட்சியைப் போக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க !!

nathan

மகாராணிகள் எல்லாம் தங்கம் போல ஜொலிக்கும் அழகுடன் இருக்க இந்த விதை தான் காரணமா?அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு உலர்ந்த சருமமா !அப்ப தினமும் செய்யுங்க…

nathan