29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
09 1433847469 1 baby
கர்ப்பிணி பெண்களுக்கு

தாய்ப்பால் கொடுப்பது குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

உங்களுக்கு சமீபத்தில் தான் பிரசவம் நடந்ததா? அப்படியெனில் உங்கள் மனதில் பல கேள்விகள் எழும். அவை அனைத்திற்கும் பதிலை யாரிடம் கேட்பது என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை அத்தகைய தாய்மார்களுக்காக ஒருசில கேள்விகளுக்கான பதிலை விளக்கமாக கொடுத்துள்ளது.

அதில் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தையும், எத்தனை வயது வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது பற்றியும், தாய்ப்பாலின் ஆரோக்கிய நன்மைகளையும் மற்றும் பல கேள்விகளுக்கான பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்ப்போமா!!!

தாய்ப்பால் கொடுக்கும் போது மேற்கொள்ள வேண்டிய டயட்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சரிவிகித டயட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் ஒரு நாளைக்கு 550 கலோரிகள் அதிகமாகவும், 25 கி புரோட்டீனையும் தவறாமல் எடுக்க வேண்டும். ஆனால் எளிதில் செரிமானமாகாத உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உட்கொண்டு வருவது மிகவும் நல்லது. மெதுவாகவும் அதே நேரம் சரியான நேரத்திலும் உணவை உட்கொண்டு வர வேண்டும். முக்கியமாக புதிய தாய்மார்கள் காப்ஃபைன் உள்ள பொருட்களை அதிகம் எடுக்கக் கூடாது.

சில பெண்களுக்கு ஏன் போதிய தாய்ப்பால் சுரப்பதில்லை?

தாய்ப்பால் போதிய அளவில் சுரக்காமல் இருக்காது. அப்படியே சுரக்காமல் இருந்தால், அது அந்த தாயின் உடலில் உள்ள சுரப்பிகளில் பிரச்சனை இருந்தால் தான் ஏற்படும். பொதுவாக பெண்களுக்கு எவ்வளவு பால் சுரக்கிறதோ அதுவே அந்த குழந்தைக்கு போதுமானதாக இருக்கும்.

தாய்ப்பால் கொடுப்பதற்கு எந்த நிலை சிறந்தது?

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது மேற்கொள்ளும் நிலை மிகவும் முக்கியமானது. அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் போது பெண்கள் மிகவும் ரிலாக்ஸாகவும், வசதியாகவும் இருக்க வேண்டும். அதற்கு முதுகிற்கு பின்புறம் 2 தலையணைகளை வைத்துக் கொண்டு, ஒரு தலையணையை மடியில் வைத்து, குழந்தையை தலையணையின் மேல் வைத்துக் கொண்டு, கையால் குழந்தையை சரியாக பிடித்துக் கொண்டு, குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். முக்கியமாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தையும் தாயும் கண்களால் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, தாய் குழந்தையை நன்கு அரவணைத்து இருக்க வேண்டும். ஒருவேளை சரியான நிலையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காவிட்டால், அது மார்பக காம்புகளில் புண் அல்லது வெடிப்புக்களை ஏற்படுத்திவிடும். பின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும்.

ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் கொடுக்கலாம்?

ஆரம்பத்தில் குழந்தையின் செய்கைகளைக் கொண்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதில் அழுதாலோ, வாயை சப்பியவாறு இருந்தாலோ அல்லது கண்களின் அசைவு அதிகமாக இருந்தாலோ, தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இப்படி பார்த்தால், குழந்தைக்கு ஒரு நாளைக்கு 8-10 முறை, 3-4 மணிநேரத்திற்கு ஒருமுறை கொடுக்க வேண்டியது அவசியம். முக்கியமாக இரவு நேரத்தில் தாய்ப்பால் அதிகம் சுரக்கக்கூடியதால், இரவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இந்நேரத்தில் குழந்தையின் பசியை அழுகையைக் கொண்டு அறியலாம்.

எத்தனை வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம்?

முன்பெல்லாம் 4 மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டி பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் 4 மாதங்கள் வரை மட்டும் தாய்ப்பால் கொடுத்து பின் நிறுத்தியதால், பல குழந்தைகள் இளம் வயதிலேயே பல நோய்களுக்கு உட்பட்டனர். ஆகவே இதனை கருத்தில் கொண்டு, 2001 இல் உலக சுகாதார நிறுவனம், பெண்கள் குறைந்தது 6 மாத காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று கூறியது. மேலும் 6 மாதங்களுக்குப் பின் குழந்தை உணவுகள், தயிர் மற்றும் வாழைப்பழத்தைக் கொடுக்க சொல்லியது. ஆனால் அதே சமயம் தாய்ப்பால் கொடுப்பதை நறுத்தக்கூடாது. மொத்தத்தில் எவ்வளவு வயது வரை உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறீர்களோ, அதனைப் பொறுத்து குழந்தையின் ஆரோக்கியம் உள்ளது. ஆகவே உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எவ்வளவு வயது வரை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

09 1433847469 1 baby

Related posts

வலிப்பு நோய் வரும் கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை

nathan

பத்து மாதமும் கண்மணியை பாதுகாக்க டிப்ஸ்

nathan

கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் தடுக்க டிப்ஸ்

nathan

கர்பிணிக்கான சித்த மருந்துகள்

nathan

குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது எப்படி கண்டு பிடிப்பது….?

sangika

தாய்ப்பால் புகட்டும் போது குழந்தைடன் பேச வேண்டும்

nathan

குறைமாதத்தில் குழந்தைகள் பிறக்க என்ன காரணம்?

nathan

“கர்ப்பகாலத்தால் சில தவறான பழக்கங்களைத் திருத்திக்கொண்டாலே, சிசேரியனைத் தவிர்த்துவிடலாம்.

nathan

காபியை அடிக்கடி அன்றாடம் குடிப்பவர்கள் கட்டாயம் இத படிங்க!….

sangika