என்னென்ன தேவை?
வெங்காயம் – 1
பூண்டு- 2 துண்டாக்கப்பட்டது
கிராம்பு- 2
காளான் – 200 கிராம்
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
Bay Leaf வாசனை இலை – 1
மைதா- 2 டீஸ்பூன்
தண்ணீர் – 3 கப்
பால் – 1 கப்
உப்பு- தேவையான அளவு
மிளகு தேவைக்கு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
எப்படி செய்வது?
கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிய பின் காளான் சேர்த்து கிளறவும் பொன்னிறமாக மாறியதும் மாவு சேர்த்து நன்றாக கிளறி தண்ணீர் சேர்த்து உப்பு, மிளகு பொடி கலந்து வேகவிடவும். வாசனை இலையை வெளியே எடுத்து விட்டு பால் கலந்து கெட்டியானதும் கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்.