28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
ld4011
சரும பராமரிப்பு

வேனிட்டி பாக்ஸ் வாக்சிங்tamil beauty tips

நன்றி குங்குமம் தோழி

வாக்சிங் என்பது அழகுக் கலையில் அனைவருக்கும் தேவைப்படுகிற ஒரு அவசிய சிகிச்சை. கை, கால்களில் என உடலின் வெளியே தெரிகிற பகுதிகளில் மட்டுமின்றி, அக்குள் போன்ற மறைவிடங்கள், முகம், தாடை என எந்த இடத்திலும் உள்ள அதிகப்படியான, தேவையற்ற ரோம வளர்ச்சியை இதன் மூலம் அகற்றிவிடலாம். தேவையில்லாத ரோமங்களை நீக்குவதில் எத்தனையோ வழிகள் இருந்தாலும் அவற்றில் மிகவும் பாதுகாப்பானதும் பக்க விளைவுகள் இல்லாததுமான முறை வாக்சிங். வாக்சிங் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றியும், வீட்டிலேயே வாக்ஸ் தயாரிக்கிற முறை பற்றியும் விளக்குகிறார் அழகுக் கலை நிபுணர் ஷீபாதேவி.

சருமத்தில் உள்ள தேவையில்லாத முடிகளை நான்கு வழிகளில் அகற்றலாம். ஏற்றவாறு உபயோகிக்கலாம். இன்னும் புதிதாக 2G, 3G, strip less wax என புதிய வடிவங்களில் waxing வந்துள்ளது. இவைகளை உபயோகிப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. இந்த வகையான waxing முறைகளை பார்லரில் தான் செய்து கொள்ள முடியும். இதற்கென பிரத்யோகமான தனித்தனி உபகரணங்கள் உள்ளன. மேலும் உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து உபயோகப்படுத்த வேண்டும். எனவே உங்கள் அழகுக்கலை நிபுணர்களிடம் கேட்டு செய்து கொள்ளுங்கள். Flavoured waxing-ல் Hydrogenetic vegetable oil, zinc oxide, paraffin wax, mineral oil, base wax, Glycerine Rosynet and Titanium dioxide. இவை அனைத்தும் flavoured wax-ல் சேர்க்கப்படுகின்றன.

1. திரெடிங்

குறிப்பிட்ட அளவு கொண்ட நூலின் உதவியால் புருவங்கள், உதடுகளுக்கு மேல், தாடை போன்ற இடங்களில் உள்ள தேவையில்லாத முடிகளை மட்டும் நீக்கும் முறையே திரெடிங். கை கால் போன்ற இடங்களில் இந்த முறையில் அகற்ற முடியாது.

2. டெபிலேஷன்

முடிகளை அகற்றும் பிரத்யேக கிரீம் மூலமாக செய்வது. இது சருமத்திற்கு நல்லதல்ல. இதனை உபயோகித்தால் சருமம் கருப்பாக மாறி விடும். சருமப் பிரச்னைகளும் வரலாம் தடிப்பு, அலர்ஜி வரலாம். தவிர முடி வளர்ச்சி முன்பைவிட அதிகரிக்கும் வாய்ப்புகளும் உண்டு.

3. ரேசர் மற்றும் எபிலேட்டர்

Razor, epilatior போன்ற மெஷின்களை பயன்படுத்தினால் மிருதுவான சருமம் கிடைக்காது. மேலும் வளரும் முடி முன்பைவிட அடர்த்தியாகவும், சீக்கிரமாகவும் வளரும். இந்த முறையில் முகத்தில் வளரும் முடியை அகற்ற முடியாது.

4. வாக்சிங்

வாக்ஸ் கலவையின் மூலம் சருமத்திலுள்ள தேவையற்ற ரோமங்களை அகற்றும் முறை இது. இதற்கான வாக்ஸ் ரெடிமேடாக கடைகளிலும் கிடைக்கும். நாமே வீட்டிலும் சுலபமாகத் தயாரித்து உபயோகிக்கலாம். தேவையற்ற ரோமங்களை அகற்ற பல வழிகள் இருந்தாலும், எந்த முறையிலும் மொத்த முடிகளையும் அகற்ற முடியாது. மிகவும் நேரம் ஆகும். வலியும் கொடுக்கும். மிகவும் சுலபமாக, குறைந்த வலியில் தேவையில்லாத முடிகளை வேர்களில் இருந்து சுலபமாக எடுக்க வாக்சிங் முறையே சிறந்தது.

வாக்சிங் இப்போது பலவித வாசனைகளில் ஃப்ளேவர்டாக கிடைக்கிறது. வாக்ஸ் என்றால் சூடு செய்து தடவி வைத்து இழுக்க வேண்டுமே என பயந்து போன காலம் இன்றில்லை. இப்போது வலியே இல்லாத பெயின்லெஸ் வாக்ஸ் கிடைக்கிறது. இதற்கென மெஷின்கள் வந்துள்ளன. ஸ்விட்ச் ஆன் செய்தாலே போதும் வாக்ஸ் தயாராகி விடும். அதை ரோமங்களை நீக்க வேண்டிய பகுதியில் தடவி, ஸ்ட்ரிப் அல்லது துணி தேவைப்படாமல் வலி இல்லாமல் முடிகளை அகற்றலாம். முகத்திற்கு என தனி வாக்ஸ் இன்று கிடைக்கிறது.

விதம் விதமான வாக்ஸ்…

1. ஆரஞ்சு வாக்ஸ் – சருமத்தின் கருமையைப் போக்க
2. தேங்காய் வாக்ஸ் – முதுமையை விரட்ட
3. பிங்க் வாக்ஸ் – சென்சிட்டிவான சருமத்துக்கு
4. லெமன் வாக்ஸ் – பிரவுன் நிறத் திட்டுகள் மற்றும் சுருக்கங்கள் நீங்க
5. பாதாம் வாக்ஸ் – வறண்ட சருமத்துக்கு
6. கிரீன் ஆப்பிள் வாக்ஸ் – அலர்ஜியான சருமத்துக்கு
7. வாழைப்பழ வாக்ஸ் – சருமத்தில் சிவப்பு நிறத்திட்டுகளைத் தவிர்க்க
8. சாக்லெட் வாக்ஸ் – ஸ்ட்ரெஸ்சை குறைக்க
9. ஹேசல்நெட் வாக்ஸ் – சருமத்தின் நிறம் கூட்டி, மென்மையாக்க
10. காபி வாக்ஸ் – சருமம்

கருப்பாவதைத் தவிர்க்க

இப்படி அவரவர் சருமத்தின் தன்மை மற்றும் தேவைக்கேற்ப பொருத்தமான வாக்ஸை தேர்வு செய்யலாம். இவை தவிர இன்று 2ஜி, 3ஜி வாக்ஸ்களும், ஸ்ட்ரிப்லெஸ் வாக்ஸ் வகைகளும் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இவற்றை உபயோகிக்கவென பிரத்யேக முறைகள் உள்ளன. பெரும்பாலும் இவை பியூட்டி பார்லர்களிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய ஃப்ளேவர்டு வாக்ஸ்களில் ைஹட்ரஜனேட்டட் வெஜிடபுள் ஆயில், ஸிங்க் ஆக்சைடு, பாரபின் வாக்ஸ், மினரல் வாக்ஸ், கிளிசரின், டைட்டானியம் டை ஆக்சைடு போன்ற பலவித ரசாயனங்களின் கலவை இருப்பதால், அழகுக் கலை நிபுணர் அல்லது சரும மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது.

வீட்டிலேயே வாக்ஸ் தயாரிப்பது எப்படி?

600 கிராம் சர்க்கரை மற்றும் 250 மி.லி. எலுமிச்சைச் சாறு இவை இரண்டையும் கலந்து அடிகனமான பாத்திரத்தில் அடுப்பில் வைத்துக் கலக்கவும். பிறகு அதிகமான தணலில் வைத்து 5 நிமிடங்களுக்கு சூடு செய்யவும். பிறகு குறைவான தனலில் 2 முதல் 3 நிமிடங்கள் கிளறி கொண்டே இருக்கவும். மெழுகு போன்ற ஒரு பதத்திற்கு வரும் வரை கிளறவும். பிறகு அரை கப் தண்ணீர் ஊற்றிப் பார்க்கவும். இந்த கலவை தண்ணீரின் அடியில் சென்றால் சரியான பதம் வந்து விட்டது. இல்லை என்றால் அந்த பக்குவம் வரும் வரை செய்யவும்.

எந்தப் பகுதிகளில் உள்ள ரோமங்களை வாக்சிங் மூலம் அகற்றலாம்?

கைகள், கால்கள், அக்குள் பகுதி, முதுகு, கழுத்து, வயிறு மற்றும் முகம்.

எப்படிச் செய்ய வேண்டும்?

முதலில் சருமத்தில் முடிகளை நீக்க வேண்டிய பகுதியில் டால்கம் பவுடர் தடவவும். பிறகு முனை மழுங்கிய கத்தியில் வாக்சை எடுத்து சருமத்தின் மேல் முடியை நீக்க வேண்டிய இடத்தில் தடவவும். முடி எந்த நோக்கில் இருக்கிறதோ அதே திசையில் தடவும். பிறகு அதன் மேல் வாக்ஸ் ஸ்ட்ரிப் (கடைகளில் ரெடிமேடாக கிடைக்கிறது) வைத்து ஒரு சீரான முறையில் அழுத்தவும். பிறகு முடி வளர்ச்சிக்கு எதிர் திசையில் ஸ்ட்ரிப்பை பிடித்து இழுக்கவும். இந்த முறையில் முடிகளை அகற்றியதும், தண்ணீரில் ஒருதுளி ஆன்டிசெப்டிக் திரவம் கலந்து காட்டன் அல்லது ஸ்பான்ஜில் நனைத்து சருமத்தை சுத்தப்படுத்தவும். பிறகு after waxing lotion அல்லது மசாஜ் கிரீம் கொண்டு மிருதுவாக மசாஜ் செய்யவும்.

உங்கள் கவனத்துக்கு…

1. வாக்சின் சூடு சருமத்துக்கு ஏற்றவாறு இருக்கிறதா என சரிபார்த்துத் தடவவும்.

2. வெட்டுக் காயங்களோ, கட்டிகளோ, புண்களோ இருந்தால் அந்த இடங்களில் வாக்ஸ் செய்ய வேண்டாம்.

3. கூடியவரையில் உபயோகித்துத் தூக்கி எறியக்கூடிய வாக்ஸ் ஸ்ட்ரிப்புகளையே பயன்படுத்தவும். பழைய துணிகளைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.
ld4011

Related posts

எப்படி நமது முகத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைப்பது!…

sangika

பிளீச்சிங்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்!…

sangika

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்

nathan

மருதாணியில் அழகும் ஆரோக்கியமும்

nathan

ஸ்டீம் பாத் எடுக்கலாம்னு இருக்கீங்களா? அதற்கு முன்னும் பின்னும் இதெல்லாம் செஞ்சுடுங்க!!

nathan

ஒரே வாரத்தில் தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்ற ஓர் அற்புத வழி!

nathan

அழகை அள்ளித்தரும் குங்குமப்பூ!

nathan

உடலில் உள்ள கருமையை உடனே போக்க வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

அழகு வேண்டுமா? ஆரோக்கியம்…

nathan