பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் பெருமளவில் தொடர்புபட்டிருப்பதாக எண்கணித சாஸ்திரம் குறிப்பிடப்படுகின்றது.
எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்தவகையில் எந்த மாதத்திலும் 8, 16, 18 மற்றும் 28 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் அதிகம் கோப உணர்வு கொண்டவர்களாகவும் பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம்.
அவர்களிடம் பகையை ஏற்படுத்திக்கொள்வது அவ்வளவு மிகவும் மோசமான விளைவுகளை கொடுக்கும் என எண்கணித சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இவர்களின் நேர்றை மற்றும் எதிர்மறை குணங்கள் தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
விசேட குணங்கள்
அனைத்து மாதத்திலும் 8, 16, 18 மற்றும் 28 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் மன ரீதியில் மிகவும் வலிமையானவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் தீவிர வசீகரம் தன்மை மற்றவர்களை இவர்களின் பால் விரைவாக ஈர்க்கக்கூடியதாக இருக்கும்.
ஆனால் இவர்கள் தங்களின் சுந்திரத்தையும் மதிப்பையும் ஒருபோதும் இழக்க விரும்பவே மாட்டார்கள்.
ஆனால் இவர்கள் ஆபத்தானவர்கள் என்றும் எப்போதும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பவர் என்று அர்த்தம் இல்லை. அவர்களின் பகை ஆபத்தாக அமையலாம்.
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தலைமை வகிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக இருப்பார்கள். இந்த குணம் இவர்களை பொரும்பாலான நேரங்களில் பழிவாங்குவதற்கு தூண்டுகின்றது.
இவர்களுடன் உறவு வைத்திருப்பது எவ்வளவுக்கு நன்மை கொடுக்கின்றதோ, அதை விட அதிகமாக இவர்களின் பகை மோசமான விளைவுகளை கொடுக்கும்.
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் அன்புக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் நண்பர்கள் மீது அதிக நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த சூழ்நிலையிலும் தங்களின் இலக்கை அடைவதில் குறியாக இருப்பார்கள். இவர்களின் பகை உணர்வு மற்றவர்களை ஒப்பிடுகையில் சற்று அதிகமாக இருக்கும்.