24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
hqdefault
சிற்றுண்டி வகைகள்

சுவையான இறால் வடை செய்வது எப்படி

தேவையான பொருள்கள் :

இறால் – 100 கிராம்
உடைத்த கடலை – ஓரு கப்
கடலை மாவு – அரை கப்
வெங்காயம் – பெரியது 1
பச்சை மிளகாய் – 5
பூண்டு – 6 பல்
இஞ்சி – சிறிய துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
சோம்பு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* இறாலை உரித்துக் சுத்தம் செய்து உப்பையும், மஞ்சள் பொடியையும் கலந்து தண்ணீரில் வேகவைத்து ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.

* வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.

* உடைத்த கடலையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

* இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை அம்மியில் நசுக்கிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வேகவைத்து அரைத்த இறால், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கி வைத்துள்ள மசாலா, அரைத்த உடைத்த கடலை, கடலை மாவு, உப்பு, மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாகப் பிசையவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, எண்ணெய் விட்டுக் கொதித்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும்வரை பொரித்து எடுக்கவும்..

* சுவையான இறால் வடை தயார்.hqdefault

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் மினி போண்டா

nathan

பன்னீர் இனிப்பு போளி செய்வது எப்படி

nathan

குஷ்பு  இட்லி,தட்டு  இட்லி,பெப்பர்  இட்லி

nathan

சிக்கன் ஸ்டப்டு பராத்தா செய்வது எப்படி?

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் கேழ்வரகு பக்கோடா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா

nathan

சுவையான உருளைக்கிழங்கு சமோசா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் காலிஃப்ளவர் பக்கோடா

nathan

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான வடைகறி ரெசிபி

nathan