23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
9b88YcW
மருத்துவ குறிப்பு

சிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்

நிலங்களில் படர்ந்து வளரும் நெருங்சில் வேர், அதிக ஆழம் வரை செல்லும். இதில், சிறு நெருஞ்சில், யானை நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் என மூன்று வகைகள் இருக்கின்றன. சிறு நெருஞ்சில் செடி… ஐந்து இதழ்களைக் கொண்ட மஞ்சள் நிற பூக்களுடன் காணப்படும். இந்தப் பூக்கள் சூரியனின் திசை நோக்கி திரும்பும் தன்மையுடையவை. காய்கள், நிலக்கடலைப் பருப்பு அளவில் எட்டு முதல் பத்து கூரிய நட்சத்திர வடிவ முட்களுடன் இருக்கும்.

யானை நெருஞ்சில்…. இலை பெரியதாகவும், காயானது சிறுநெல்லி அளவிலும் இருக்கும். செப்பு நெருஞ்சில்… இலைகள் சிறியதாகவும், மிளகு அளவிலான முட்கள் இல்லாத காய்களுடன் மூன்று இதழ்களைக் கொண்ட சிவப்பு நிற பூக்களுடன் இருக்கும். இவை அனைத்துக்குமான மருத்துவக் குணங்களில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. நெருஞ்சில் இலையில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை இருக்கின்றன. பாலியல் பிரச்னைகளையும், சிறுநீரகக் கோளாறுகளையும் நீக்கும் அருமருந்தாக உள்ளது.

சிறுநீரகத்தை சிராக்கும் சிறந்த மருந்து

சிறுநீரகக் கோளாறுகளுக்கு நெருஞ்சில் நல்ல மருந்து. சிறுநீரகப் பாதைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ‘அன்யூரியா’ (Anuria) எனப்படும் சிறுநீர் தடைப்பட்டு வலியுடன் வெளிவரும் நோய்க்கு, நெருஞ்சில் சேர்த்த ‘கோக்சூராதி க்ருதம்’நல்ல மருந்து.

சிதைந்த நெருஞ்சில் முள் 50 கிராம், கொத்தமல்லி விதை 5 கிராம் ஆகியவற்றை 500 மில்லி நீரில் இட்டு சுண்டக் காய்ச்சி, காலை-மாலை இருவேளையும் 60 மில்லி அளவு குடித்து வந்தால்… கல் அடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு, நீர்எரிச்சல் போன்றவை குணமாகும். நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இரண்டையும் சமஅளவு எடுத்துப் பொடி செய்து, அதிலிருந்து 2 கிராம் எடுத்து, இளநீரில் கலந்து குடித்து வந்தால், கல் அடைப்பு குணமாகும். இதன் இலையை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி, கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால்… சிறுநீரில் ரத்தம் கலந்து போகும் பிரச்னை குணமாகும்.

சூட்டை குறைக்கும்

இரண்டு நெருஞ்சில் செடியை வேருடன் பிடுங்கி, ஒரு பிடி அருகம்புல் சேர்த்து, அதில், ஒரு லிட்டர் நீர்விட்டு, அரை லிட்டர் அளவுக்கு வரும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை காலை, மாலை இருவேளையும் 50 மில்லி அளவு, மூன்று நாட்கள் குடித்து வந்தால், உடல்சூடு தணியும். கண்எரிச்சல், கண்ணில் நீர்வடிதல், சொட்டுசொட்டாக சிறுநீர் போதல் ஆகியவை குணமாகும்.

கர்ப்பப்பைக்கும் சிறந்தது!

நெருஞ்சில் வேரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து குடித்து வந்தால், பூப்படையாத பெண்கள் பூப்பெய்துவார்கள். 50 கிராம் நெருஞ்சில் இலையில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து, அதைப் பாதியாக காய்ச்சி, தினமும் சிறிதளவு குடித்து வந்தால் பெண்களுக்கான கர்ப்பப்பைக் கோளாறுகள் சரியாவதுடன், குழந்தைப்பேறு உண்டாகும்.

ஆண்மை அதிகரிக்கும்!

நெருஞ்சில் முள்ளை பசும்பாலில் வேகவைத்து, உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு, அதில், 2 கிராம் எடுத்து பாலில் கலந்து, காலை, மாலை இருவேளைகளும் பருகி வந்தால், ஆண்மை பெருகும். நெருஞ்சில் இலையை வெள்ளாட்டுப் பாலுடன் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்துக் குடித்து வந்தால், ஆண்மை அதிகரிக்கும். நெருஞ்சில் வேர், கீழாநெல்லி வேர் இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்து, இளநீரில் கலந்து குடித்து வந்தால், மஞ்சள் காமாலை நோய் குறையும்.

சிறுநீரகக் கோளாறுகளுக்கான அறுவை சிகிச்சைகளுக்கு அவசியமில்லாமல்… பல ஆயிரங்களை மிச்சப்படுத்தும் நெருஞ்சிலை நெஞ்சில் இருத்துங்கள்… வாழ்வு வளமாகும்…9b88YcW

Related posts

உங்க மார்பகங்களை பெரிதாக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

nathan

சூப்பரா பலன் தரும்!! கீல்வாதத்தைத் தடுக்கும் சில எளிய இயற்கை வழிகள் இதோ!

nathan

நீங்கள் தினமும் அதிகம் சாப்பிட கூடாத 5 உணவுகள்!அவசியம் படிக்க..

nathan

பல் வலியை போக்க நந்தியா வட்டை!

nathan

வெயிலைக்கூட சமாளிக்க இந்த இலை ஒன்றே போதும்……

sangika

தாம்பத்திய உறவில் பெண்களின் மனநலம் எப்படி இருக்கும்

nathan

கருப்பை நீர்கட்டியால் ஏற்படும் வலியை குணப்படுத்த சூப்பர் டிப்ஸ்..!

nathan

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

nathan