24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
sl3568
சூப் வகைகள்

ஜவ்வரிசி – சோள சூப் (சைனீஸ் ஸ்டைல்)

என்னென்ன தேவை?

ஜவ்வரிசி – 1 கப், சோளம் – 1 கப்,
வெஜிடபுள் ஸ்டாக் கியூப் – 1,
சிவப்பு பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது),
பிராக்கோலி அண்ட் பாதாம் சூப் பவுடர் பாக்கெட் – 1/2 பாக்கெட் (அல்லது ரெடிமேட் சூப் பாக்கெட்),
பட்டர் – 1 டேபிள்ஸ்பூன்,
முழு வெங்காயத்தாள் – 1,
சோள மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்,
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கொத்தமல்லி – சிறிது,
கருப்பு மிளகுத் தூள் (அ) வெள்ளை மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை களைந்து 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். குக்கரில் ஊறிய ஜவ்வரிசி, சோளம், சோயா சாஸ், சிவப்பு பச்சை மிளகாய், வெங்காயத்தாள், சர்க்கரை, உப்பு, வெஜிடபுள் ஸ்டாக் கியூப், 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி 4, 5 விசில் விட்டு வேக வைக்கவும். வெந்த ஜவ்வரிசி மற்றும் கார்னை ஒரு வாயகன்ற சட்டியில் ஊற்றிக் கொதிக்க வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீரில் பிராக்கோலி அண்ட் பாதாம் சூப் பவுடரை கரைத்து சூப்புடன் சேர்த்து மேலும் கொதிக்க விடவும். சோள மாவை 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரில் கரைத்து ஊற்றிக் கொதிக்கவிடவும். கடைசியாக கொத்தமல்லி, பட்டர் மற்றும் தேவைக்கு மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலக்கிப் பரிமாறவும்.sl3568

Related posts

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பூசணிக்காய் சூப்

nathan

சத்து நிறைந்த வல்லாரை கீரை சூப்

nathan

சுவையான ஸ்வீட் கார்ன் சூப்

nathan

வொண்டர் சூப்

nathan

ஸ்பைசி சிக்கன் சூப்

nathan

சுவையான ஓட்ஸ் – ப்ரோக்கோலி சூப்

nathan

வெள்ளரி சூப்

nathan

பசியைத் தூண்டும் மிளகு சீரக சூப்

nathan

இனிப்பு சோளம் சூப்

nathan