msedge aHua8tcrnd
Other News

பாப் பாடகருக்கு மரண தண்டனை விதித்த ஈரான் நீதிமன்றம்!

ஈரானைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகர் அமீர் ஹொசைன் மக்சூட்லூ (37). உடல் முழுவதும் பச்சை குத்தியிருக்கும் இவர், ‘டாட்டாலூ’ என அழைக்கப்படுகிறார். ராப், பாப் மற்றும் R&B ஆகியவற்றை இணைக்கும் வகையில் அவர் உடல் முழுதும் பச்சை குத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் இவர் ஏற்கெனவே, ஈரானின் அரசியல் மற்றும் சமூகப் பழக்கவழக்கங்கள் குறித்துப் பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்த நிலையில், அவர் நபிகள் நாயகத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. விபசாரத்தை ஊக்குவித்தல், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தது உள்ளிட்ட வழக்குகளும் அவர்மீது தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் தேடப்பட்ட பாடகர் அமீர் ஹொசைன் மக்சூட்லூ, 2018-ஆம் ஆண்டுமுதல் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் தங்கி இருந்தார்.

msedge aHua8tcrnd
பின்னர் துருக்கி போலீசார் அவரை 2023-ஆம் ஆண்டு ஈரானிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் ஈரானில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதில் தெய்வ நிந்தனை தொடர்பான வழக்கில் பாடகர் அமீர் ஹொசைன் மக்சூட்லூ, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 10 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, பாடகருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

என்றாலும், இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல என்றும், மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நிர்-வாண*மாக புகைப்படம் எடுத்து விற்ற தாய்!

nathan

தனுஷிற்கு தெரியாமல் மகன் வாழ்க்கைக்கு முதல் அடிதளம்!

nathan

மைனா நந்தினியின் Back பெருசா இருக்க இது தான் காரணம்..

nathan

6ம் இடத்தில் 3 கிரக சேர்க்கை! விபரீத ராஜயோகம் பெறும் மகரம்!

nathan

கோபம் குறையாத சங்கீதா..! விஜயின் நிலைமை திண்டாட்டமா?

nathan

குழந்தை பிறக்கும் தேதி தள்ளிப்போனால் என்னாகும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்திய அளவில் சாதனை படைத்த ‘லியோ’ திரைப்படம்.!

nathan

சிறுமியின் விவரம் கேட்கும் இசைமைப்பாளர் இமான்..!வைரலாகும் அப்பா பாடல்…

nathan

வெளியேறிய பின்னர் ஜோவிகா சந்தித்த முதல் பிக்பாஸ் போட்டியாளர்.!

nathan