25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
how to make paneer samosa SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான பன்னீர் சமோசா செய்வது எப்படி

சுவையான பன்னீர் சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான பன்னீர் சமோசா செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

மைதா மாவு – 1 கப்,
உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்ப,
நெய் – 1 டீஸ்பூன்,
பன்னீர் – 50 கிராம்,
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப,
சாட் மசாலா, உப்பு,
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப.

செய்முறை :

* மைதா மாவுடன் உப்பு, நெய் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

* பன்னீரை துருவி அதன் மேல் உப்பு, சாட் மசாலா, மிளகாய் தூள் தூவி நன்றாக கலந்து கொள்ளவும்.

* பிசைந்து வைத்துள்ள மைதா மாவிலிருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து பூரியாகத் திரட்டி மத்தியில் சிறிது பன்னீர் மசாலாவை வைத்து சமோசா வடிவத்தில் மடக்கி ஓரங்களில் சிறிது தண்ணீர் கொண்டு ஒட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்து எடுக்கவும்.

* சுவையான பன்னீர் சமோசா ரெடி.

குறிப்பு :

* பன்னீரை பொடியாக நறுக்கியும் போடலாம். விருப்பப்பட்டால் காய்கறிகளையும் உடன் சேர்த்து செய்யலாம்.how to make paneer samosa SECVPF

Related posts

காஞ்சிபுரம் இட்லி

nathan

மொறு மொறு அச்சு முறுக்கு செய்வது எப்படி…?

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடா

nathan

பூரண பூரி : செய்முறைகளுடன்…!

nathan

அகத்திக்கீரை சொதி

nathan

சூப்பரான சிக்கன் – உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

அச்சு முறுக்கு

nathan

பருப்பு போளி எப்படிச் செய்வது?

nathan

ஆரோக்கியமான சாமை அரிசி புலாவ்

nathan