அன்றாட பழக்கவழக்கம் உங்கள் விந்தணு உற்பத்தியை பாதிக்குமா என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். ஆண்களின் விந்தணு உற்பத்தி பற்றி பேச வேண்டியது மிக முக்கியமான விஷயமாகும். தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்களின் விந்தணு உற்பத்தியின் அளவு குறைந்துக் கொண்டிருக்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் இவ்வுலகிற்கு மறைத்து வரும் உண்மை ஆகும்.
சராசரியாக ஓர் ஆணின் விந்து வெளிப்படும் போது இரண்டு மில்லி அளவாவது இருக்க வேண்டும். இதற்கு குறைவாகவோ அல்லது தண்ணீர் போன்று வெளிப்படுவது ஆணின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். இதற்கும் அன்றாட வாழ்வியல் பழக்கவழக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?
இருக்கிறது, உங்களது உணவுப் பழக்கத்தில் இருந்து வேலை செய்யும் இடம் வரை பல பழக்கவழக்கங்கள் உங்கள் ஆண்மையையும், விந்தணு உற்பத்தியையும் பாதிக்கலாம்….
ஊட்டச்சத்துக் குறைவு
இன்றைய இன்ஸ்டன்ட் உணவு கலாச்சாரமும் இதற்கு மிக முக்கிய காரணமாய் திகழ்கிறது. ஊட்டச்சத்துக் குறைவு, நாம் சாப்பிடும் உணவில் ருசியை மட்டும் எதிர்பார்க்கும் நாம், அதில் என்ன சத்து இருக்கிறது என்று பார்ப்பது இல்லை.
புகை
புகை உங்களுக்கு பகை என்று எழுதி வைத்தாலும், எடுத்துரைத்தாலும் கூட, இங்கே பலர் அதை கண்டுக் கொள்வதில்லை. அதன் பயனாய், ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது. இது உங்களை மட்டும் அல்ல, உங்கள் சந்ததியினரையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகமாக சுடுநீரில் குளிப்பது
தினமும் மிகுதியான சுடுநீரில் குளிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுவும், உங்கள் விந்தணு உற்பத்தியை பாதிக்கின்றதாம்.
மது
மதுவை தீண்டினால், மாதுவை தீண்ட முடியாது. புகையைப் போல இதுவும் விந்தணு உற்பத்தியை பாதிக்கிறது. இவை எல்லாம் நாள்பட தான் தனது தாக்கத்தை வெளிக்காட்டும்.
போதைப் பழக்கம்
மதுவை தீண்டினால், மாதுவை தீண்ட முடியாது. புகையைப் போல இதுவும் விந்தணு உற்பத்தியை பாதிக்கிறது. இவை எல்லாம் நாள்பட தான் தனது தாக்கத்தை வெளிக்காட்டும்.
உடல் பருமன்
இந்நாட்களில் ஆண்கள் விந்தணு உற்பத்தி மற்றும் ஆண்மைக் குறைவினால் பாதிப்படைய முக்கிய காரணமாய் இருப்பது உடல் பருமன் தான். இதற்கு காரணமாக இருப்பது, நாம் எடுத்துக் கொள்ளும் இன்ஸ்டன்ட் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட்கள்.
மன அழுத்தம
் நிறைய பேர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. வேலை பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தமும் கூட இன்றைய ஆண்களின் மத்தியில் விந்தணு உற்பத்தி குறைய காரணமாக இருக்கின்றது.