யோகா, தியானத்தில் மலக்கழிவு வெளியேற்றம் முக்கியமான ஒன்று. சூசி முத்திரை மலச்சிக்கலைத் தீர்க்கும்.
நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் சூசி முத்திரை
முத்திரைகள் மருத்துவ ரீதியாக பயன் அளிக்கிறது. உடலில் தேங்கும் கழிவுகளை நீக்க இயற்கை தந்த அமைப்பு வியர்வை,சிறுநீர் ,மலம் கழித்தல். கழிவுகளை நீக்கினாலே உடல் உபாதைகள் குறையும். இன்று அதிகமாக உள்ள உபாதை மலச்சிக்கல். இதன் தொடர் விளைவாக வாயுக் கோளாறுகள், அல்சர், மூட்டுவலிகள், வாத நோய்கள், வலிப்பு போன்றவை ஏற்படுகின்றன.
மன அழுத்தம் இருக்கும்போது மலங்கள் சரியாக வெளியேறாமல் உடலில் தங்குவதால், உடல், மன உபாதைகள் மட்டுமின்றி, உணர்வு ரீதியிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. யோகா, தியானத்தில் மலக்கழிவு வெளியேற்றம் முக்கியமான ஒன்று. சூசி முத்திரை மலச்சிக்கலைத் தீர்க்கும்.
நாட்டியத்தில் இம்முத்திரை தேடுதல், திட்டுதல், பின்னல் பின்னுதல், கோவிலில் மேளம் அடிப்பது போன்ற பல பொருள் தர இம்முத்திரை காட்டப்படுகிறது. சூசி முத்திரையைத் தலைக்கு மேல் பிடித்து வட்டமாகச் சுழற்றினால், அது அண்ட சராசரத்தையும், நெஞ்சிற்கு நேராகப் பிடித்தால் அது பரமேஸ்வரனான சிவனையும் குறிக்கும்.
செய்முறை :
கை விரல்களை மடக்கி வைத்து, ஆள்காட்டி விரல் மட்டும் நேராக, வானை நோக்கி இருக்கும்படி வைத்துக் கொள்வது சூசி முத்திரை. தினமும் இம் முத்திரையை 5-15 நிமிடம் செய்வதால் நாள்பட்ட மலச்சிக்கலும் நீங்கும்.