25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sl3608
கேக் செய்முறை

முட்டையில்லாத பிளாக் ஃபாரஸ்ட் கேக் (ஜெர்மனி)

என்னென்ன தேவை?

கன்டென்ஸ்டு மில்க் – 1 டின்,
சூடான பால் – 1/2 கப்,
வெண்ணெய் – 100 கிராம்,
சர்க்கரை – 60 கிராம்,
வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன்,
மைதா – 250 கிராம்,
பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்,
சமையல் சோடா – 1 டீஸ்பூன்,
கோகோ – 4 டீஸ்பூன்.

அலங்கரிக்க…

ஃப்ரெஷ் க்ரீம் – 1/2 கிலோ,
சாக்லெட் பார் – 50 கிராம்,
செர்ரி பழம் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெண்ணெய், சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க், வெனிலா எசென்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து நுரைக்க அடிக்கவும். மைதா, பேக்கிங் பவுடர், கோகோ ஆகியவற்றைச் சேர்த்து சலித்துக் கொள்ளவும். அடித்த வெண்ணெய்-சர்க்கரை கலவையுடன் மைதா, பேக்கிங் பவுடர், கோகோ கலவையைச் சேர்க்கவும். சூடான பாலையும் ஊற்றி தோசை மாவு பதத்துக்குக் கலந்து, ஒரு பேக்கிங் டிரேயில் வைத்து 180°C உஷ்ணத்தில் பேக் செய்யவும். பிறகு சாக்லெட் கேக்கை வெளியே எடுத்து வைத்து ஆற வைக்கவும்.

ஃப்ரெஷ் க்ரீமை நன்றாக நுரைக்க அடிக்கவும். இப்போது சாக்லெட் கேக்கை கத்தியால் ஸ்லைஸ் செய்யவும். அடித்த ஃப்ரெஷ் க்ரீமில் சிறிதளவு எடுத்து கேக் மேல் தடவவும். பின் சாக்லெட் பாரைத் துருவவும். அதன் மேல் இன்னொரு கேக் ஸ்லைஸைப் பரத்தவும். மீண்டும் க்ரீம் தடவி சாக்லேட் பாரைத் துருவவும். இப்படி மூன்று முறை செய்தபின் கடைசியில் நான்குபுறமும் க்ரீம் தடவி சாக்லெட் துருவலைத் தூவி, பொடியாக நறுக்கிய செர்ரி பழங்களையும் தூவி அலங்கரித்து சுமார் 4 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

sl3608

Related posts

முட்டையில்லாத ரிச் கேக்

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் கேக்

nathan

முட்டையில்லா டுட்டி ப்ரூட்டி கேக்

nathan

பலாப்பழ கேக்

nathan

கூடை கேக்

nathan

பனானா கேக்

nathan

ஸ்பாஞ்ச் கேக் : செய்முறைகளுடன்…!​

nathan

அன்னாசி பழ கேக்

nathan

பான் கேக்

nathan