27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
11 1441961579 potato mochai varuval
சைவம்

உருளைக்கிழங்கு மொச்சை வறுவல்

உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு ஓர் அருமையான மற்றும் வித்தியாசமான உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இந்த ரெசிபியின் ஸ்பெஷல் உருளைக்கிழங்குடன் மொச்சையை சேர்த்து வறுவல் செய்வது தான். இது சாம்பார் சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு மொச்சை வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து வீட்டில் முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

11 1441961579 potato mochai varuval

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 1 (பெரியது) மொச்சை – 1 கப் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 1 கறிவேப்பிலை – சிறிது

மசாலாவிற்கு…

தேங்காய் – 1/2 கப் (துருவியது) சீரகம் – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 2 மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் பூண்டு – 2 பற்கள்

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கு மற்றும் மொச்சையை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, 3 விசில் விட்டு, 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். பின்னர் விசில் போனதும் குக்கரை திறந்து, நீரை முற்றிலும் வடிகட்டி, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு கத்தியால் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் மொச்சையை சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து, நன்கு நீர் வற்றும் வரை பிரட்டி இறக்கினால், உருளைக்கிழங்கு மொச்சை வறுவல் ரெடி!!!

Related posts

வாழைக்காய் பொடிக்கறி

nathan

சோயா மட்டர் புலாவ்|soya matar pulao recipe in tamil

nathan

வாழைக்காய் வெல்லக்கூட்டு

nathan

கொத்தமல்லி சப்பாத்தி செய்வது எப்படி

nathan

உருளை வறுவல்

nathan

பச்சை சுண்டைக்காய் கார குழம்பு

nathan

பாலக் டோஃபு கிரேவி

nathan

சுவையான சத்தான அவகேடோ சப்பாத்தி

nathan

வாழைக்காய் சிப்ஸ்

nathan