26.3 C
Chennai
Tuesday, Feb 4, 2025
2155558 Dead L
Other News

சிறுவன் வெறிச்செயல் – கணவன், மனைவி சுட்டுக்கொலை…

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள தக்ரோகி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர சிங் (வயது 62). இவரது மனைவி சரோஜ். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ராஜேந்திர சிங் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர்களுடன் ராஜேந்திர சிங்கின் சகோதரியும், அவரது மகனும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திர சிங்குக்கும் அவரது சகோதரிக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திர சிங் சகோதரியின் மகனான சிறுவன் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து ராஜேந்திர சிங், அவரது மனைவி மற்றும் மகன் 3 பேரையும் சரமாரியாக சுட்டான்.

 

இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேந்திர சிங் மற்றும் அவரது மனைவி பரிதாபமாக இறந்தனர். அவர்களின் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உறவுக்காரர்களை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

60 வயசுலயும் இப்படியா..? – டூ பீஸ் நீச்சல் உடையில் நச்சென ராதிகா..!

nathan

பிரதமர் மோடி புகழாரம் – சாம்பியன்களின் சாம்பியன் வினேஷ் போகத்’

nathan

. காசு கொடுத்தா கண்டபடி நடிக்கத் தயார்.. லாஸ்லியா அறிவிப்பால் திரளும் தயாரிப்பாளர்கள்!

nathan

இந்த 4 ராசிக்காரங்க தனிமையில இருக்கிறது நரகத்துல இருக்கிற மாறி யோசிப்பாங்கலாம்

nathan

ஐஐடி-யில் படித்துவிட்டு சலவைத் துறையில் சாதித்த அருனாப்!

nathan

விஜயகாந்த் ஒரு சகாப்தம் – இலை போட்டு வயிறார உணவிட்ட ஏழைகளின் நாயகன்..

nathan

எலிமினேட் ஆகி சென்ற 3 பேரை மீண்டும் உள்ளே அனுப்பும் பிக்பாஸ்.?

nathan

கால்நடைகளை மீட்டு பராமரிப்பதற்காக ’பத்மஸ்ரீ’ விருது பெற்றுள்ள சையத்!

nathan

ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளா இப்படி..

nathan