36.5 C
Chennai
Wednesday, Jun 18, 2025
Uea3IdhbyK
Other News

வீட்டில் சண்டையா? மும்பையில் செட்டில் ஆனதற்கு இது தான் காரணம்

மும்பையில் இதனால் தான் இருக்கிறேன் என்று நடிகை ஜோதிகா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவர் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்தார். இதனிடையே இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

திருமணத்திற்க்கு பிறகு ப்ரேக் எடுத்துக்கொண்ட ஜோதிகா ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிகை என்பதை தாண்டி தயாரிப்பாளரும் ஆவார். தற்போது ஜோதிகா பாலிவுட்டிலும் கால் தடம் பதித்திருக்கிறார். அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘சைத்தான்’ படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

1aajo
சூர்யா-ஜோதிகா மும்பை வீடு:
இதை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி இருந்த ‘ஸ்ரீகாந்த்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது ஜோதிகா பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, மும்பையில் சூர்யா-ஜோதிகா சொந்தமாக வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகி விட்டதாக சோசியல் மீடியாவில் தகவல் வைரல் ஆகி வருகிறது. சூர்யா வாங்கி இருக்கும் வீட்டின் விலை 70 கோடி என்று கூறப்படுகிறது. இவ்வளவு கோடியில் சூர்யா வீடு வாங்கியதற்கு காரணம், தன்னுடைய பிள்ளைகளின் கல்விக்காக என்று கூறப்படுகிறது.

Uea3IdhbyK
மும்பையில் செட்டிலான ஜோதிகா:
அதோடு ஜோதிகாவிற்கு ஹிந்தியில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் அவர் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டதாகவும், சூர்யா மட்டும் சென்னை- மும்பை என்று அடிக்கடி அலைந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு காரணம், மாமனார் – மாமியாருடன் சண்டை போட்டு தான் ஜோதிகா மும்பைக்கு சென்று விட்டார் என்று கூறுகிறார்கள். சூர்யா-ஜோதிகா மும்பையில் வீடு வாங்கியதில் இருந்தே பல வதந்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

 

ஜோதிகா கொடுத்த விளக்கம்:
இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜோதிகாவிடம் கேட்டபோது அவர் கூறியது, கொரோனா காலகட்டத்தில் என்னுடைய பெற்றோருக்கு பலமுறை பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால் அந்த சமயத்தில் அவர்களை என்னால் பார்க்க மும்பைக்கு செல்ல முடியவில்லை. அதனால் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களுடன் சில காலம் இருக்கலாம் என்று முடிவு செய்தேன். அதனால் தான் மும்பைக்கு வந்து செட்டில் ஆனேன். மற்றபடி சோசியல் மீடியாவில் வரும் வதந்திகள் எல்லாம் பொய் என்று கூறியிருக்கிறார்.

சூர்யா திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருக்கிறார் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் ‘கங்குவா’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இதை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல் என்ற பட்டத்தில் சூர்யா நடிக்கிறார்.

Related posts

பன்னீர் பட்டர் மசாலா

nathan

700 ஆண்களுடன் உட-லுறவு வைத்த பெண்!6 நாட்களும் பாலிய-ல்

nathan

1000 ஆண்டுகள் பழமையான வேற்றுகிரகவாசியின் சடலம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

nathan

டைட்டில் வின்னர் அர்ச்சனாவிற்கு குவிந்த பரிசுகள்…

nathan

Priyanka Chopra Masters the Thigh-High Slit and More Best Dressed Stars

nathan

சூர்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியான கங்குவா க்ளிம்ப்ஸ்

nathan

விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த பிரக்யான் ரோவர்

nathan

இந்த ராசி பெண்கள் பல முகம் கொண்டவர்களாம்…

nathan

ஓணம் பண்டிகையை கொண்டாடிய பிரபல நடிகை நதியா

nathan