சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் பிரான்ஸ் நாட்டு நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
சிறிய விமானங்கள் ரத்து
பிரான்சில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற குட்டி விமானம் ஞாயிற்றுக்கிழமை மதியம் விபத்துக்குள்ளானது.
மூன்று சுற்றுலா பயணிகள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
BREAKING: Paris plane crash kills three as ‘light aircraft ploughs into motorway after hitting power cable’https://t.co/S3eLmD31i5 pic.twitter.com/HAJbxr8bWP
— Mirror Breaking News (@MirrorBreaking_) June 30, 2024
.
விமானம் மின்கம்பியில் மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போக்குவரத்து நிறுத்தம்
விமானம் விபத்துக்குள்ளானதால் நெடுஞ்சாலையில் இரு திசைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும், ஆனால் எந்த வாகனமும் விபத்தில் சிக்கவில்லை என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படங்கள் நெடுஞ்சாலையின் நடுவில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் எச்சங்களை காட்டுகிறது.