24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
201605091114328090 How men should behave in the office SECVPF
மருத்துவ குறிப்பு

அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

அலுவலகத்தில் ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்க பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.

அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?
இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும். இதோ உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்!

* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. அதனால்தான் ஆள் பாதி ஆடைபாதி என்றார்கள். மாடர்ன் ஆக உடுத்தினாலும்கூட, நேர்த்தியாக உடுத்துங்கள்.

* முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சினைகள். சொந்த குடும்ப விஷயங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள். அட்வான்டேஜ் எடுக்க முன் வருவார்கள்!

* உடன் வேலை செய்தாலும் பர்சனல் செல் நம்பர்களை யாருக்கும் தராதீர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர.

* சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சினைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள். உயர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் பழிவாங்கும் படலம் உங்கள் வேலைகளில் குறை கண்டுபிடிப்பதில் ஆரம்பிக்கும். அதனால் முடிந்தவரை வேலைகளில் தவறு செய்யாதீர்கள்.

* ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல. அதற்காக எல்லாவற்றுக்கும் கைகொடுப்பது, தொட்டுப் பேசுவது கூடாது.

* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.

* அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல். இவையெல்லாம் நம் அக்கம்பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

* ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மனமெச்சூரிட்டி போன்றவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். ஆனால் பொதுவான ஆண்கள் சமூகம் என்பது பெண்ணை வித்தியாசமான அங்க அவயங்கள் கொண்ட சதைப் பிண்டம் என்றே நினைக்கிறது. ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்கிறானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

* ஆபிஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது "நன்றி" என்று ஸ்ட்ரெய்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிருங்கள்.

* யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள். அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.

* அரட்டையில், ஜோக்ஸ் என்ற பேரில் விரச பேச்சுகளை அனுமதிக்காதீர்கள்.

* எந்த ஆணாவது உங்களிடம் தவறாக நடந்து கொண்டால், முதலில் நீங்களே இரண்டொரு முறை எடுத்துச் சொல்லி கண்டித்துப் பாருங்கள். அப்படியும் தொடர்ந்தால் உங்கள் மேலதிகாரியிடம் புகார் செய்யுங்கள்.

* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.

* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.

* விழா, விசேஷம் தவிர உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் செல்லாதீர்கள்.

* ஆண்கள், தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* பெண்களுக்கு தங்கள் விஷயங்களை பகிர்ந்துகொள்ள நட்பு ரீதியிலான பழக்கம் ஆணிடமோ, பெண்ணிடமோ ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் அது அவளது சுயகௌரவத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும். அதுவே பாதிப்புகளை ஏற்படுத்தாது. அதுவே நிலைக்கும்!201605091114328090 How men should behave in the office SECVPF

Related posts

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கொய்யாப்பழம்

nathan

பிரசவ வலி இல்லாமல் 15 நிமிடத்தில் குழந்தை பிறக்க ..!

nathan

ஏலக்காய் வாசனைக்கு மட்டுமல்ல உடலிற்கும் எண்ணற்ற நன்மை பயக்க வல்லது…!

nathan

உங்களுக்கு பற்சொத்தையா!! இந்த ஒரே ஒரு பொருளை கையில் எடுங்க!

nathan

இப்படி இருந்தால் ஆபத்து? பச்சை உருளைக்கிழங்கு நஞ்சா?

nathan

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் உடலில் ஆக்ஸிஜன் மிகக் குறைவு என்று அர்த்தமாம்.

nathan

இந்த 10 விஷயத்த நீங்க கரெக்ட்டா செஞ்சுட்டு வந்தா நீண்டநாள் ஆரோக்கியமா வாழலாம்!

nathan

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையா? கவலை வேண்டாம்!

nathan

கர்ப்பிணிகள் இந்த வேலைகளை செய்வதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும்…

nathan