24.6 C
Chennai
Friday, Dec 27, 2024
பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்
சூப் வகைகள்

பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்

தேவையான பொருட்கள்
பிஞ்சு பாகற்காய் – 200 கிராம்
பாசிப்பருப்பு – 100 கிராம்
இலவங்க இலை – 2
இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
ப.மிளகாய் – 1
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
நெய் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
தண்ணீர் – அரை லிட்டர்
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
செய்முறை :
• கொத்தமல்லி, பாகற்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• பாசிப்பருப்பை வேகவைத்து நீரில் கரைத்து கொள்ளவும்.
• ப.மிளகாயை நீளவாக்கில் கீறிகொள்ளவும்.
• பாகற்காயை வேகவைத்து கொள்ளவும்.
• வாணலியில் நெய் ஊற்றி சீரகம், இலவங்க இலையை சேர்த்து தாளித்து பாகற்காய், மிளகுதூள், இஞ்சி விழுது, ப.மிளகாய் இட்டு நன்கு வதக்கி கரைத்து வைத்துள்ள பருப்பு கரைசலை கலந்து உப்பு இட்டு நன்கு கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
• இதை பருகினால் ஜீரண கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்புண் குணமாகும். கல்லீரல் நோயாளிகளுக்கும் இது ஏற்ற உணவு.%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D %E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 %E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D

Related posts

பரங்கிக்காய் சூப்

nathan

முருங்கைக்கீரை சூப்

nathan

ஓட்ஸ், பூண்டு சூப்

nathan

நண்டு தக்காளி சூப்

nathan

மனத்தக்காளி கீரை தேங்காய்பால் சூப்

nathan

நூடுல்ஸ் சூப்

nathan

முருங்கைக்காய் சூப்

nathan

சுவை மிகுந்த நண்டு சூப் செய்வது எப்படி….?

nathan

காளான் சூப்

nathan