29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201605061428068346 how to make carrot almond kheer SECVPF
இனிப்பு வகைகள்

இனிப்பான கேரட் பாதாம் கீர் செய்வது எப்படி

தேவையான பொருள்கள் :

பால் – 3 கப்
சர்க்கரை – முக்கால் கப்
கேரட் – 3
பாதாம் பவுடர் – 2 மேசைக்கரண்டி
குங்குமப்பூ – 2 இதழ்
பாதாம், முந்திரி – சிறிதளவு

செய்முறை :

* கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வேகவைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாலைக் காய்ச்சி வைக்கவும்.

* காய்ச்சிய பாலில் ஒரு கப் பாலை எடுத்து பாதாம் பவுடர் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும்.

* மீதமுள்ள காய்ச்சிய பாலில் அரைத்து வைத்துள்ள கேரட் விழுதைச் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து மிதமான தீயில் அடிபிடிக்காமல் கொதிக்க வைக்கவும்.

* அதனுடன் சர்க்கரையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கலக்கவும்.

* பிறகு பாதாம் பவுடர் சேர்த்து கரைத்து வைத்திருக்கும் பாலைச் சிறிது சிறிதாக ஊற்றி கலந்து, வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்

* சுவையான கேரட் பாதாம் கீர் தயார்.

* பாதாம், முந்திரி, குங்குமப் பூவை தூவி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.

* கேரட்டிற்கு பதிலாக பீட்ரூட், டிரை ஃப்ரூட்ஸ், பேரீச்சம்பழம் என்று எதில் வேண்டுமானாலும் செய்யலாம்.201605061428068346 how to make carrot almond kheer SECVPF

Related posts

கேரளா மட்டை அரிசி பால் பாயாசம்!ஆஹா பிரமாதம்

nathan

சுவையான தீபாவளி ஸ்பெஷல் லட்டு செய்ய…!!

nathan

ஸ்பெஷல் லட்டு

nathan

பூந்தி, லட்டு செய்முறை, எப்படி பூந்தி லட்டு செய்வது , லட்டு செய்முறை

nathan

பைனாப்பிள் – தினை கேசரி

nathan

அதிரசம், முறுக்கு.. தேங்காய் பூ லட்டும், பளபள பாயசமும்.. ரெசிப்பி கார்னர்

nathan

பூசணி அல்வா

nathan

கோவா- கேரட் அல்வா

nathan

பால் பணியாரம்

nathan