29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
17 1434518499 11
மருத்துவ குறிப்பு

அதிகமாக பதட்டமடைவதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகள்!!

பிரகடனம் செய்யப்படாத இன்றைய அவசர கால உலகில், எல்லாமே உடனே நடக்க வேண்டும். காத்திருக்க நமது கால்கள் ஒத்துழைத்தாலும், நமது மனது மின்னல் வேகத்தில் காரியங்களை முடிக்க அவசரப்படுகிறது. இது, நமது சுய வாழ்வில் மட்டுமின்றி, அலுவலக வாழ்விலும் கூட எதிர்பார்க்கப்படுகிறது.

மனைவியிடம் ஐந்து நிமிடத்தில் சமையல் எதிர்பார்த்த கணவன்மார்களுக்கு இரண்டு நிமிட நூட்லஸ் கிடைத்து வந்தது. ஆனால், அதில் சத்துகள் என்று ஒன்றுமில்லையே. அவ்வாறு தான், ஓர் வேலையை செய்து முடிக்க ஓர் மாதம் ஆகும் எனில், அதை ஓர் வாரத்தில் முடிக்க வேண்டி மேலிடத்தில் இருந்து கட்டளை வரும்.

இங்கு தான் பிறக்கிறது பதட்டம். முடியாது என்ற போதிலும், முடிக்க வேண்டும் என்ற கட்டாயம். பெரும்பாலும், இந்த பதட்டமும், மன அழுத்தும் கணினியின் முன்னே அமர்ந்து தங்களது டார்கெட்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் ஜீவராசிகளுக்கு மட்டும் தான் வருகிறது. இதனால் என்ன ஆக போகிறது? என்ற கேள்விக்கு விடை, உடல்நல பாதிப்புகள் அதிகரிக்கும்!!!

மேலும், அதிகமாக பதட்டமடைவதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகள் பற்றி தெரிந்துக்கொள்ள ஸ்லைடுகளைப் படிக்கவும்….

மனநிலை பாதிப்பு

பெரும்பாலும், 20% இளைஞர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட காரணமாக இருப்பது இந்த பதட்டமும், மன அழுத்தமும் தான்.

தற்கொலை வாய்ப்புகள்

தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர்களில் 70% பேர் பதட்டத்தினால் தான் அந்த முடிவை எடுக்கின்றனர் என்கிறது ஓர் ஆய்வறிக்கை.

மனப்பதட்ட நோய்

– வகைகள் பொது மனப்பதட்டம், பயம் / அச்சத்தினால் ஏற்படும் பதட்டம், உளவியல் ரீதியாக கட்டாயப்படுத்துதல், சமூக சம்மந்தமான பதட்டம், குறிப்பிட்ட தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சல், போன்ற மனபதட்ட நோய் வகைகள் பொதுவாக இருக்கிறது.

மனப்பதட்ட நோய் அறிகுறிகள்

தூக்கமின்மை, மூச்சு திணறல், அதிகமாக வியர்ப்பது, இதயம் வேகமாக துடிப்பது, முடியாது என்று தெரிந்தும் கட்டாயப்படுத்தப்படும் போது ஏற்படும் அச்சம், அன்றாட, தினசரி வேலைபாடுகளில் கவனம் குறைவு போன்றவ மனப்பதட்ட நோயின் அறிகுறிகளாக கூறப்படுகிறது.

உங்கள் கவனத்திற்கு

எந்த ஓர் விஷயமும் உங்களை ஏதும் செய்ய முடியாது என்ற கவனம் உங்களுக்கு இருக்க வேண்டும், முக்கியமாக தைரியம். பெரும்பாலும் வேலை காரணங்களினால் தான் பதட்டம் ஏற்படுகிறது எனில், நீங்கள் தைரியமாக முனைந்து பேச வேண்டும். இந்த வேலையை செய்து முடிக்க இவ்வளவு நாட்கள் ஆகும், அதனுள் முடிப்பது சாத்தியமற்றது என நீங்கள் தான் எடுத்துரைக்க வேண்டும். நீங்கள் பேசாத வரை, அவர்கள் பேசுவதை மட்டுமே கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

பதட்டத்தை உங்களை தவிர வேறு யாரும் கட்டுப்படுத்த முடியாது. மன வலிமையை அதிகரித்துக் கொள்ளுங்கள். உங்கள் முடிவு சரியெனில், அதில் விடாப்பிடியாக இருங்கள். அச்சமற்ற வாழ்வு தான் பதட்டத்தை போக்கும் நற்மருந்து!

நல்ல உறவு

அமைப்பு உங்களை சுற்றி ஓர் நல்ல உறவுகளை அமைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உடல் அளவிலும், மனதளவிலும் ஒத்துழைப்பு / உதவும் நண்பர்கள், உறவுகள் உங்களை பாதுகாப்பாகவும், நிம்மதியாவும் வைத்துக்கொள்ள உதவும்.

திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்

மனப்பதட்ட நோயை வீழ்த்த ஓர் சிறந்த வழி, திறமைகளை வளர்த்துக்கொள்வது. திறமை இருக்குமிடம் வெற்றிகளும், வாய்ப்புகள் தேடி வந்து குவியும் என்பார்கள். எனவே, உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அறிமுகம் இல்லாத இடங்கள்

அறிமுகம் இல்லாத இடங்களில் தான் அதிகம் பதட்டம் ஏற்படும். அந்த இடங்களில் நீங்களாக முன் சென்று பழகும் மனோபாவத்தை பின்பற்றுங்கள். பின் பதட்டம் கூட பதறியடித்து ஓடும்.

தவிர்க்க வேண்டியவை

அதிகமான காஃபைன் (Caffeine), புகை , மது போன்றவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம்.

மருத்துவ ஆலோசனை

சரியான மனநல மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்வது நல்ல முன்னேற்றத்தை தரும்.

நடிக்க வேண்டாம்

உள்ளுக்குள்ளே பயத்தை கிலோ கணக்கில் வைத்துக்கொண்டு, தான் ஒரு தைரியசாலி என்பது போல நடிக்க வேண்டாம், இது உள்ளுக்குள் மனப்பதட்ட நோயை அதிகரிக்குமே தவிர குறைக்காது. எனவே, உண்மையாக இருங்கள்.

கடைசியாக…

எந்த வேலையையும் தெரியவில்லை என்று ஒதுக்க வேண்டாம், அல்ல தெரியாமல் அதை ஏற்றுக்கொண்டு திருதிருவென விழிக்க வேண்டாம்.. அதைக் கற்றுக்கொண்டு வேலையை செய்து முடிக்க பழகுங்கள், இது உங்களது மன வலிமையையும், தைரியத்தையும் அதிகரிக்க உதவும்.

17 1434518499 11

Related posts

இதோ எளிய நிவாரணம்! ஒழுங்கற்ற மாதவிடாயால் அவதியா? அதனை சீராக்க இந்த பயிற்சிகளை செய்திடுங்க

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அஸ்வகந்தா தேநீர்

nathan

தண்ணீர் அதிகமாக குடித்தால் ஆபத்தா?

nathan

உங்க லவ் நம்பர் உங்களை பற்றி என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சுக்கனுமா? இதப் படிங்க!

nathan

மலச்சிக்கல் உடனடியாக குணம் பெற சூப்பர் பாட்டி வைத்தியம்….

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முதன் முதலில் குழந்தை பெற்ற பெண்களிடம் சொல்ல கூடாத விஷயங்கள் என்ன தெரியுமா?

nathan

கையில் உள்ள திருமண ரேகை உங்கள் திருமணத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

முதுமையில் கா்ப்பம் தாித்தல் மற்றும் செயற்கை கருவூட்டல் பற்றிய விளக்கம்!

nathan

உஷரா இருங்க…! இந்த கீரையை அதிகமா சாப்பிட்டா… சிறுநீரக கல் ஏற்படும்மா?…

nathan