27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

புத்துணர்ச்சி தரும் வெள்ளரி ஃபேஸ் பேக்

cucumber_facial_maskவெள்ளரிக்காயில் நிறைய நன்மைகள் இருக்கிறது. இதை பயன்படுத்தி ஃபேஸ் பேக் செய்வதால் சருமமானது இறுகி, வலுவடைகிறது. மேலும் இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருவளையம் போன்றவற்றை எளிதாக நீக்குகிறது.

இதனால் சருமமானது பொலிவுடன், பிரகாசமாக இளமை தோற்றத்தைத் தருகிறது. எப்படியெல்லாம் ‘வெள்ளரி ஃபேஸ் பேக்’ செய்யலாம் என்று பார்க்கலாம்.

1. வெள்ளரிக்காயை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், தயிர் மற்றும் தேன் விட்டு நன்கு கலக்கவும். பின் அதனை முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவலாம்.

2. வறண்ட சருமம் உள்ளவர்கள், ஒரு டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட் உடன் சிறிது எலுமிச்சைப்பழசாற்றை விட்டு, முட்டையின் வெள்ளை கருவை அதில் விட்டு முகத்தில் தடவி 25 நிமிடம் விட்டு காய வைத்து, பின் கழுவவும். இதனால் முகத்தில் பிம்பிள் இருந்தால் அது மறைந்துவிடும்.

3. வெள்ளரிக்காய் பேஸ்டை, தேன் மற்றும் எலுமிச்சைப்பழசாற்றுடன் கலந்து, புதினாவை அரைத்து அத்துடன் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், முகமானது புத்துணர்ச்சியுடன் இருப்பதுடன், இளமையோடும் காட்சியளிக்கும்.

4. வெள்ளரிக்காய் ஜூஸை 2 டேபிள்ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் 10 துளி ரோஸ் வாட்டரை சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவவும். நிறைய நேரம் ஊற வைத்து விட வேண்டாம், இல்லையென்றால் முகத்தில் சுருக்கங்கள் வந்துவிடும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் இருக்கும் பிம்பிளை அகற்றும்.

இவற்றை வாரம் இரு செய்து பாருங்கள், முகமானது அழகாக, பொலிவாக, மென்மையாக இருப்பதோடு, புத்துணர்ச்சியோடும் மின்னும்.

Related posts

விரைவில் கருவளையத்தை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

nathan

திருட்டு வழக்கில் குக்வித் கோமாளி புகழ் அஷ்வின்!

nathan

மஞ்சள் பேஸ் பேக் போடும் போது செய்யக்கூடாதவை!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆணுடன் படுக்கையறையில் ஜூலி…புகைப்படம்

nathan

பாதத்திற்கு மசாஜ் செய்தால், அதுவும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுகிறது.

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே லிப் ஸ்க்ரப் தயாரிக்கலாம்!

nathan

கேரளத்து தேங்காய் சட்னி

nathan

குழந்தையுடன் செளந்தர்யா ரஜினிகாந்த் -புகைப்படம்

nathan

ஃபேஷியல்

nathan