25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
7
தலைமுடி சிகிச்சை

வெயில் காலத்தில் தலையை பராமரிக்கும் விதம் !அழகின் ரகசியம்!!

அழகின் ரகசியம்!

டான்ஸர் கம் டாக்டர்’ ஸ்ரீநிதியின் அழகு ஆலோசனை!

7

எ க்கச்சக்கமா தண்ணி குடிப்பேன். முகத்தை அடிக்கடி கழுவிக்குவேன். மூணு நாளுக்கு ஒருமுறை முகத்துக்கு கடலை மாவு போட்டுக் கழுவுவேன். வாரம் ஒருமுறை பாலும் கடலை மாவும் கலந்து ஃபேஸ் பேக் ஆகப் போட்டு, அது உலர்ந்ததும் கழுவுவேன். அப்புறம், தினமும் காலையில எழுந்ததும் முகத்தை நல்லா கழுவிட்டு, முகத்துக்கு குங்குமாதி தைலம் (நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும்) அப்ளை பண்ணுவேன்.
p90b
”வெயில் காலம் வந்தாலே என் தலையில் வியர்வை வடிந்து, நாறுகிறது. தலைமுடியும் வறண்டுபோய் வெடிப்பாகி விடுகிறது. அதோடு, செம்பட்டையாகவும் ஆகி விடுகிறது. அடிக்கடி ஷாம்பு போட்டு குளித்தும் சரியாகவில்லை.
வெயில் காலத்தில் தலையை பராமரிக்கும் விதம் பற்றிச் சொல்லுங்களேன்… ப்ளீஸ்.”

5

”வெ யில் காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறும். இதனால், தலையில் பிசுபிசுப்பு ஏற்பட்டு, முடி வெடிப்பதுடன், செம்பட்டையாகவும் ஆகிவிடும். பஸ்ஸிலோ, டூ வீலரிலோ போகும்போது புழுதிபடுவதால், முடி வறண்டு கொட்டத் தொடங்கும். தலையை சுத்தமாக வைத்திருப்பதே இதற்கு நல்ல தீர்வு. வாரம் இருமுறையாவது நான் சொல்கிற முறையில் தலையை அலசி வந்தாலே, எல்லாப் பிரச்னைகளும் சரியாகி விடும்.
bullet4 செம்பருத்தி இலை – 10, கொட்டை நீக்கிய புங்கந் தோல் – 3 எடுத்து, இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருநாள் இதைத் தலை முழுவதும் பூசி, நன்றாகத் தேய்த்து அலசுங்கள். புங்கந் தோல், தலையில் உள்ள அழுக்கை நீக்கும். செம்பருத்தி, கூந்தலை மிருதுவாக்கும்.
bullet4 சீயக்காய் – கால் கிலோ, பயத்தம் பருப்பு – 200 கிராம், பூலான்கிழங்கு – 100 கிராம், சிறு துண்டுகளாக்கிய வெட்டிவேர் – 10 கிராம்… இந்த நான்கையும் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு இந்தப் பவுடரை பயன்படுத்துங்கள். இதனால் முடி கொட்டாமல், செழிப்பாக வளரும். வாசனையுடனும் இருக்கும்.
பேன் தொல்லை இருந்தால் இந்த பவுடருடன், துளசி பவுடர், சுட்ட வசம்புத்தூள் – தலா 1 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். பேனோ, பொடுகோ கிட்டவே நெருங்காது.
தலைக்கான ஹென்னா கண்டிஷனர் தயாரிக்கும் முறையைச் சொல்கிறேன்…

6

bullet4
மருதாணி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன், வெந்தய பவுடர், அரைத்த டீத்தூள், நெல்லிக்காய் தூள் தலா – 1 டீஸ்பூன், தயிர் – 2 டீஸ்பூன்… எல்லாவற்றை யும் கலந்து, இத்துடன் 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, வெந்நீர் ஊற்றி பேஸ்ட் ஆக்குங்கள். இதைத் தலையில் நன்றாகத் தேய்த்து அலசுங்கள்.
மருதாணி, தலையை குளிர்ச்சியாக்கும். வெந்தயம், முடி வெடிப்பையும் நுனி பிளவையும் போக்கும். நெல்லிக்காய், முடி கொட்டுவதை நிறுத்தும். நல்லெண்ணெய், செம்பட்டையான முடியை கறுமையாக்கும். தயிரும் டீத்தூளும் கூந்தலை மிருதுவாக்கும்.”

Related posts

உங்கள் தலைமுடி வறண்டு, பொலிவிழந்துள்ளதா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

தலைமுடியை தீர்மானிக்கும் வம்சம்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களின் வழுக்கை தலையில் முடி வளர தயிரை எப்படி பயன்படுத்த வேண்டும்?

nathan

கூந்தல் வளர, இளநரை மறைய கரிசலாங்கண்ணி

nathan

உங்களுக்கு மொட்டை மண்டையில கூட கிடு கிடுனு முடி வளர வைக்கணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பளபளப்பான மற்றும் அடர்த்தியான தலைமுடியை பெற சூப்பர் டிப்ஸ்

nathan

கோடையில் முடி கொட்டுவதற்கு என்ன காரணம்?

nathan

அடர்த்தியான கூந்தல் வேண்டுமா?

nathan

வழுக்கை விழுவதைத் தடுக்க வழிகள்

nathan