22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
24 65bcba2ebc066
Other News

நடிகர் விஜய்… குடும்பத்தில் குழப்பமா?

நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்ததையடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். திரைப்படங்கள் மட்டுமின்றி சமூக சேவையிலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்த அவர் விரைவில் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய் தமிழ்நாடு வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி அதற்கு அறிக்கையும் வெளியிட்டார்.

2024ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் தற்போது அறிவித்துள்ள அவர், 2026ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

24 65bcba2ebc066

லியோ பட வெற்றி விழாவிலேயே அரசியல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கப்பு முக்கியம் பிகிலு என்று கூறி சூசகமாக தனது பதிலை அளித்தார்.

மேலும் அந்த விழாவில், “புரட்சித் தலைவர் என்றால் ஒருத்தர் தான்… நடிகர் திலகம் என்றால் ஒருத்தர் தான்.. கேப்டன் என்றால் ஒருத்தர் தான்.. உலக நாயகன் என்றால் ஒருத்தர் தான்.. சூப்பர் ஸ்டார் என்றால் ஒருத்தர் தான்… தல என்றால் ஒருத்தர் தான்..

அதேபோல தளபதி என்பவர் மன்னர்கள் ஆணையிடுவதைச் செய்வார்கள். அரசருக்குக் கீழ் இருப்பவர். எனக்கு மக்களாகிய நீங்கள் தான் மன்னர்கள். நீங்கள் சொல்வதைச் செய்யும் தளபதி நான். நீங்கள் ஆணையிடுங்கள் அதைச் செய்து விட்டுப் போகிறேன்” என்று கூறியிருந்தார்.

 

தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, இனி முழுநேர அரசியலில் ஈடுபடுவதாகவும் வெளியிட்டுள்ளார்.

தற்போது விஜய் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே விஜய் அரசியலில் இறங்குவதால் தான் குடும்பத்தில் சர்ச்சை என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்சியின் பெயரை அறிவித்திருக்கிறார். இதன் பின்பு அவரது குடும்பத்தில் ஏற்படும் மாற்றம் என்ன என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related posts

இந்த 5 ராசிக்காரங்க அவங்களோட உண்மையான காதலை அடையப்போறாங்களாம்…

nathan

நெல்சனுக்கு இப்படி ஒரு Imported காரை பரிசாக அளித்து அசர வைத்த கலாநிதி மாறன்

nathan

மருமகளுக்கு வைர நெக்லஸ்.. பரிசளித்த நீதா அம்பானி..

nathan

சுற்றுலா சென்ற வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி

nathan

இந்தியாவின் மிகப்பெரிய சக்கரை ஆலைக்கு சொந்தக்காரி!

nathan

பாக்கியராஜ் மகன் நடிகர் சாந்தனு திருமண புகைப்படங்கள்

nathan

ஒரு டீ கப் விலை என்ன தெரியுமா..நீதா ஆம்பானி ஆடம்பரத்திற்கு அளவில்லை..

nathan

தனுஸை வீட்டிலிருந்து ஒதுக்கி வைக்க இது தான் உண்மை காரணம்!

nathan

விஜய் மேல இவ்வளவு வன்மமா? கீர்த்தி சுரேஸ் அப்பா காட்டம்!

nathan