29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
பீட்ரூட் அல்வா
இனிப்பு வகைகள்

பீட்ரூட் அல்வா

பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம். அதிலும் அதனை பொரியல், சாம்பார் என்று செய்து சாப்பிடாமல், அல்வா செய்தால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு பீட்ரூட் அல்வா எப்படி செய்வதென்று தெரியவில்லையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் இங்கு பீட்ரூட் அல்வாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

துருவிய பீட்ரூட் – 2 கப் கொதிக்க வைத்த பால் – 1 கப் சர்க்கரை – 1/2 கப் நெய் – 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன் ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் பாதாம், முந்திரி – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து 3-5 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் பால் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் மென்மையாகும் வரை வேக வைக்கவும். பின் பால் வற்றும் வரை அடுப்பில் வைத்து, பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அப்படி கிளறி விடும் போது, கலவை அடிப்பிடிக்கும் வகையில் வரும். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறி விட வேண்டும். பின் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.

அதே சமயம் மற்றொரு அடுப்பில், சிறு வாணலியை வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அல்வாவில் சேர்த்து பிரட்டினால், சுவையான பீட்ரூட் அல்வா ரெடி!!!

Related posts

இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் பலகாரம்!

nathan

சுவையான பாதாம் பர்ஃபி

nathan

வேர்க்கடலை பர்ஃபி : செய்முறைகளுடன்…!

nathan

கோதுமை ரவா கேசரி

nathan

பாலக்கீரை குழிப்பணியாரம் செய்வது எப்படி

nathan

nathan

கேரட் பாயாசம்

nathan

உலர் பழ அல்வா

nathan

அதிரசம், மைசூர் பாகு செய்ய வேண்டுமா??

nathan