28 C
Chennai
Wednesday, Nov 13, 2024
2 chickenkorma 1662379548
அசைவ வகைகள்

சுவையான நீலகிரி சிக்கன் குருமா

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 1 கிலோ

* பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* பெரிய தக்காளி – 1 (நறுக்கியது)

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 2-3 டேபிள் ஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

வறுத்து அரைப்பதற்கு…

* சீரகம் – 1 டீஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* கசகசா – 1 டீஸ்பூன்

* பட்டை – 1 இன்ச்

* ஏலக்காய் – 2

* துருவிய தேங்காய் – 5 டேபிள் ஸ்பூன்

* முந்திரி – 8

* பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்

வதக்குவதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* சின்ன வெங்காயம் – 8-10

* பச்சை மிளகாய் – 4

* கொத்தமல்லி – 3 டேபிள் ஸ்பூன்

* புதினா – 15 இலைகள்

2 chickenkorma 1662379548

செய்முறை:

* முதலில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வதக்குவதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் மற்றும் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

Nilgiri Chicken Korma Recipe In Tamil
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அதன் பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, தக்காளியைப் போட்டு வதக்கி, நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.

* பின்னர் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, 7-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* அடுத்து சிக்கன் துண்டுகளை சேர்த்து, எலுமிச்சை சாற்றினை ஊற்றி நன்கு கிளறி, 5-6 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பின் அதில் 3 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து, சிக்கனை 10 நிமிடம் வேக வைத்து, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான நீலகிரி சிக்கன் குருமா தயார்…

Related posts

செட்டிநாட்டு இறால் வறுவல்

nathan

சூப்பரான சிக்கன் பட்டர் மசாலா

nathan

சுவையான தயிர் சிக்கன்

nathan

சுவையான மங்களூர் முட்டை குழம்பு

nathan

சூப்பரான இறால் தொக்கு செய்ய

nathan

முட்டை – சிக்கன் சப்பாத்தி ரோல்

nathan

சுவையான தக்காளி மீன் குழம்பு

nathan

முட்டை சாட்

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை

nathan