ஹே ராம் படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன்.
அதன் பிறகு, அவர் பள்ளி, பல்கலைக்கழகம், இசை மற்றும் பிற படிப்பைத் தொடர்ந்தார். பின்னர், கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் வானம் எல்லை எ பாடலின் மூலம் பாடகியானார்.
அப்பாடலை தொடர்ந்து ஸ்பெஷலாக தமிழை போற்றும் வண்ணம் உருவான செம்மொழி பாடலில் ஹை பிட்சில் பாடல் பாடி அனைவரின் கவனத்தை பெற்றார்.
2011ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அடுத்தடுத்து பணியாற்றிய அவர், இறுதியாக பெரிய பட்ஜெட் படமான ‘சலார்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
நடிகை ஸ்ருதிஹாசன் 21 வயதில் இருந்தே செலவு செய்வதில் கவனமாக இருந்ததாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நடிப்பு, விளம்பரம், இசை விழா, படங்களில் பாடல்கள் பாடுவது என பல திறமைகளை வெளிக்காட்டி அசத்திவரும் ஸ்ருதிஹாசனின் சொத்து மதிப்பு ரூ. 80 முதல் ரூ. 90 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
ஸ்ருதிஹாசன் தற்போது ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.