28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
face
முகப் பராமரிப்பு

முகம் பொலிவு பெற..

சிலருக்கு சருமமானது மென்மையிழந்து பொலிவின்றி காணப்படும். சருமத்தை முறையாக பராமரிக்காமல் வந்தால், சருமத்துளைகளில் அழுக்குகள் படிந்து, முகமே பொலிவிழந்து இருக்கும். இங்கு பொலிவான பட்டுப்போன்ற சருமத்தைப் பெற உதவும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சாமந்தி பூஃபேஸ் பேக்:

சாமந்தி பூவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 ,15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டி செப்டிக் தன்மையினால், சருமத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும். அதிலும் இதனை எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் வாரம் இருமுறை போட்டு வந்தால், நல்ல பலன் காணலாம்.

மஞ்சள் மற்றும் கடலை மாவு பேக்:

4 டேபிள் ஸ்பூன் கடலை மாவில், 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, அதனை பச்சை பால் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பொலிவான சருமத்தைப் பெறலாம்.

சந்தன மாஸ்க்:

சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள பிம்பிள் மறைந்து, பொலிவான மற்றும் மென்மையான சருமத்தைப் பெறலாம்.

தேன் மற்றும் எலுமிச்சை மாஸ்க்:

1 டேபிள் ஸ்பூன் தேனில் 35 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கண்களில் படாதவாறு முகத்தில் தடவி 10 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை தவறாமல் செய்து வந்தால், விரைவில் நல்ல பலனைக் காணலாம்.

ஹெர்பல் பேக்:

சிறிது கடலை மாவுடன், 1 சிட்டிகை மஞ்சள் தூள், சில துளிகள் எலுமிச்சை சாறு, அத்துடன் ரோஸ் வாட்டர் அல்லது காய்ச்சாத பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கருமைகள் நீங்கி, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.

Related posts

இதோ சில டிப்ஸ்… முகத்திலுள்ள தழும்புகளை நீக்க வேண்டுமா?

nathan

கண்களுக்குக் கீழ் வீக்கம்… தடுக்க 7 எளிய வழிமுறைகள்!

nathan

முகத்தில் உள்ள அழுக்கை நீக்கும் ஸ்கரப்

nathan

உங்களுக்கு தெரியுமா கருவளையங்களை போக்க மேக்கப் மட்டும் போதாது..! இதை முயன்று பாருங்கள்!

nathan

முகம் பளபளப்பாக இருக்க சிறந்த டிப்ஸ்!….

sangika

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளை தீர்க்கும் துளசி பேஸ் பேக்

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சீக்கிரமாக போக்க சூப்பர் டிப்ஸ்…

nathan

ஆர்கானிக் ஃபேஷியல் இவ்வளவு நன்மைகளா?

nathan

கோடை வெயில் தூசு மாசிலிருந்து உங்க சருமத்தை பாதுகாத்து பளபளப்பாக ஜொலிக்க வைக்க

nathan