25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2 cabbage chutney 1663248007
சட்னி வகைகள்

முட்டைக்கோஸ் சட்னி

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* கடலை பருப்பு – 1 டீஸ்பூன்

* முட்டைக்கோஸ் – 2 1/2 கப் (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 1-3

* கறிவேப்பிலை – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

பிற பொருட்கள்…

* புளி – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – அரைப்பதற்கு தேவையான அளவு

தாளிப்பதற்கு…

* நல்லெண்ணெய் – 1-2 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* வரமிளகாய் – 1-2 (விதைகளை நீக்கியது)2 cabbage chutney 1663248007

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.

* பின் அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

Cabbage Chutney Recipe In Tamil
* அதன் பின் அதில் முட்டைக்கோஸை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* முட்டைக்கோஸ் பாதியாக அல்லது அரை வேக்காடாக வெந்ததும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு, 1 டீஸ்பூன் புளி சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அரைத்த சட்னியை ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1-2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், முட்டைக்கோஸ் சட்னி தயார்.

Related posts

சுட்ட கத்திரிக்காய் சட்னி செய்முறை

nathan

ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி

nathan

வெந்தயத் துவையல் (சட்னி)

nathan

நெல்லிக்காய் சட்னி

nathan

சுவையான தக்காளி கடலைப்பருப்பு துவையல்

nathan

உருளைக்கிழங்கு சட்னி

nathan

பாகற்காய் சட்னி

nathan

காலிஃபிளவர் சட்னி

nathan

காசினி கீரை சட்னி

nathan