23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sa
எடை குறைய

வீட்டில் இருந்தே உடல் எடையை குறைக்கும் வழிகள்

அதிக தண்ணீர் குடித்தல் (நீர் சிகிச்சை) அதிகரிக்கும்:
தண்ணீர் அதிகமாக குடிப்பது தான். இதனால் வயிறு நிறைவதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும். சுமார் 4 முதல் 5 லிட்டர் ஒவ்வொரு நாளும் குடிக்க வேண்டும்.

அவரவர் உடலின் தன்மைக்கேற்ப த‌ண்ணீர் குடிக்கும் அளவு மாறுபடும். இதை கண்டறிய சுலபமான வழி, உங்கள் எடையை 20ஆல் வகுத்துக் கொள்ளவும். அதில் வரும் அளவே நீங்கள் தினமும் குடிக்கவேண்டிய தண்ணீரின் அளவாகும். எடுத்துக்காட்டாக உங்கள் எடை 70 கிலோ என்றால், அதை 20ஆல் வகுக்க 3.5 அளவு வரும், என்வே நீங்கள் தினமும் குடிக்க வேண்டிய குறைந்த பட்ச நீரின் அளவு 3.5 லிட்டர். 10 நாளில் உங்கள் எடையை குறைக்க முக்கியமான வழிமுறை இது.

2. காபி அல்லது டீ பதிலாக பச்சை தேயிலை/க்ரீன் டீ:

வெறும் வயிற்றில் காலையில் சூடான பச்சை தேநீர்/க்ரீன் டீ ஒரு கப் குடிப்பது உங்களது உடலில் உள்ள நச்சுக்களை சுத்தப் படுத்தும்.இது மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கிறது. க்ரீன் டீயில் குறைந்த அளவே கலோரி உள்ளது, தினமும் காலையில் டீ அல்லது காபிக்கு பதிலாக க்ரீன் டீயுடன் தொடங்குவது எடை இழப்புக்கான‌ நல்ல வழிமுறை.

3. சூடான நீரில் தேன் மற்றும் எழுமிச்சை கலந்து பருகுவது:
சூடான நீரில் தேன் மற்றும் எழுமிச்சை கலந்து பருகுவது மிக வேகமாக எடையை குறைக்கும் வழியாகும்:
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், தேன் அரை ஸ்பூன் கலந்து, வெறும் வயிற்றில் காலையில் குடிக்க, 10 நாட்களில் உங்கள் எடை குறைவதை நீங்களே உணர்வீர்கள்.

4. கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் அளவை குறைக்க வேண்டும்:

அரிசியில் க‌லோரி மற்றும் கார்போஹைட்ரேட் நிறைய உள்ளது. எனவே அரிசியை குறைவாக‌ உட்கொள்வதால் எடையை குறைக்கலாம் இந்திய (தென் இந்தியர்கள்) மக்கள் நிறைய பேர் காலையும், மாலையும் இட்லி, தோசையையே உணவாக உண்கிறார்கள். நீங்கள் எடை இழக்க வேண்டும் என்றால், இப்படி தினமும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள அர்டி சார்ந்த பொருட்களை உட்கொள்வதை கண்டிப்பாக குறைக்க வேண்டும்.
5. அதிகமாக‌ புரதம் உட்கொள்ளவேண்டும்:
புரதம் நமது உடலில் கொழுப்பின் அளவை குறைக்கிறது. நம் உடல் தசைகளில் படிந்துள்ள அதிகப்படியான கொழுப்பையும் கரைக்கும். எனவே கார்போஹைட்ரேட் அதிகம் சேர்த்துக் கொளவ்தற்கு பதிலாக புரோட்டீன் அதிகம் உள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்வது நன்று.
6. நார்ச் சத்து அத்கம் உள்ள உணவை உட்கொள்ளுங்கள்:
நார்ச்சத்து உணவை உட்கொள்ள எடை சசீக்கிரம் குறையும். நார்ச்சத்து உணவை சேர்த்துக் கொள்வதால் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும், ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. நார்ச்சத்து உணவை சாப்பிடும் போது வயிற்றின் கொள்ளளவு அதிக நேரம் தாக்குப் பிடிக்கிறது. உடம்பும் அதிகம் சூடாவதை தடுக்கிறது. நம் உடம்பின் சர்க்கரையின் அளவையும், இரத்த ஓட்டத்தையும் சமச் சீராக வைக்க உதவுகிறது. இருதய நோய் மற்றும் இருதய அடைப்பு ஏற்படுவதையும் தடுப்பதன் மூலம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது, நம் இதய தொகுதிகள், இரத்த நாளங்கள் இவற்றில் ஊள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதோடு, மாரடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது. நார்ச்சத்து உணவை அதிகம் உட்கொள்வதால் உடம்பில் கெட்ட கொழுப்பை சேர விடாமல் தடுக்கலாம்.

ஓட்ஸ், பருப்பு, ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், தவிடு, ஸ்ட்ராபெர்ரி, கொட்டைகள், ஆளிவிதை, பீன்ஸ், உலர்ந்த பட்டாணி, அவுரிநெல்லிகள், வெள்ளரிகள், செலரி மற்றும் கேரட் இவைகளைக் கொண்டு விதவிதமாக சாப்பிட முடியும். எனவே உடல் எடையை குறைப்பதற்கு சுவையான உணவுகளையும் குறைக்கவேண்டும் என அவசியம் இல்லை.

7. மலச்சிக்கல் பிரச்சினை தவிர்க்க:

மலச்சிக்கலால் என்றுமே எடை குறையாது. ஏனெனில் நம் உடலின் நச்சு மற்றும் கழிவு கூறுகள் அப்படியே தங்கி விடுவதால் உடல் எடை அதிகரிக்குமே தவிர குறையாது. ம்றக்காமல் நம் உடலின் நச்சு மற்றும் கழிவு கூறுகளை தினமும் வெளியேற்றுவதை ஒரு வ்ழக்கமாக கொள்ள வேண்டும்.
தண்ணீர் மற்றும் பழச்சாறு நிறைய குடிக்க வேண்டும். மேலும் ஆப்பிள்கள், ஓட்ஸ் மற்றும் பச்சை காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள‌ வேண்டும். வாழை அல்லது பழுத்த பப்பாளி ஒரு இயற்கை மலமிளக்கியாக செயல் படுகிறது. இவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம், அதிக வைட்டமின்கள் நாம் பெற‌, ம‌ருந்துகள் உட்கொள்ள வேண்டும் என அவசியம் இல்லை, நார்ச்சத்து நிறைந்த உணவே போதும்.
sa

Related posts

உடல் எடை குறைக்க விரும்புவோருக்கான மாற்று உணவுகள்!!!

nathan

உங்க எடை கூடிக்கிட்டே இருக்கா..?

nathan

உடல் எடை குறைய -கொழுப்பை எரிக்கும் கொடம்புளி (படம் & சாப்பிடும் முறை )

nathan

பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்

nathan

48 மணிநேரத்தில் 3 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா? அப்ப இந்த வழிய ஃபாலோ பண்ணுங்க…

nathan

தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் வேகமாக உடல் எடை குறைவதை உங்களால் உணர முடியும்….

sangika

உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த இரவு நேர உணவுகள்

nathan

உங்களுக்கு ஒரே மாதத்தில் உடலை எடையை குறைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்

nathan