கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள பெரியதாளப்பாடியைச் சேர்ந்த தர்மேந்திரன் (44) என்பவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் (41) என்பவரது மனைவி ரித்திலாவுக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.
சரவாணியும், தர்மேந்திராவும் கடந்த 6 ஆண்டுகளாக கணவன்-மனைவி போல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன் இலக்கியா, தர்மேந்திரனையும் கழட்டுவிட்டுட்டு வேறு ஒருவருடன் சென்று விட்டார்.
இதையறிந்த சரவணன், கடந்த 22ம் தேதி தர்மேந்திராவின் வீட்டிற்கு சென்று, மனைவி பிரிந்ததற்கு நீங்கள் தான் காரணம் என கூறியுள்ளார். இப்போது நிம்மதியாக வாழ முடியாது என்று கூறி மோதலில் ஈடுபட்டுள்ளார். மறைத்து வைத்திருந்த கத்தியால் தர்மேந்திராவின் காதை அறுத்துள்ளார்.
வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ரத்தம் கொட்டியது. அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.