muttonkebab
அசைவ வகைகள்

மட்டன் கபாப் : செய்முறைகளுடன்…!​

தேவையான பொருட்கள் :

மட்டன் கொத்துக்கறி – 1 கிலோ
இஞ்சிபூண்டு விழுது – 3 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பப்பாளிக்காய் பேஸ்ட் – 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

சாஸ் செய்ய :

புதினா இலை -1 கப்
கெட்டி தயிர் – 1/2 கப்
பூண்டு – 1 பல்
பச்சை மிளகாய் – 1
சீரக தூள்- சிறிது
உப்பு
* மேலே சொன்ன அனைத்தையும் நன்கு மிருதுவாக அரைத்து, கபாப்புடன் பறிமாறவும்.

செய்முறை :

* முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, தண்ணீரில்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மட்டன் கொத்துக்கறி, வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, வெண்ணெய், பப்பாளிக் காய் பேஸ்ட், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

* அந்த கலவையை இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு ஊற வைக்கவும்.

* பிறகு அதனை எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

* எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அந்த கலவையை நீளவாக்கி உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* இப்போது சுவையான மட்டன் கபாப் ரெடி!!!

* இதன் மேல் கொத்தமல்லி மற்றும் புதினாவைத் தூவி சாஸ்சுடன் பரிமாறலாம்.
muttonkebab

Related posts

சுவையான சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

nathan

கிராமத்துக் கோழிக் குழம்பு (village chicken kuzhambu)

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன்

nathan

நெத்திலி மீன் கிரேவி

nathan

சுவையான மட்டன் கடாய்

nathan

கணவாய்ப் பொரியல்

nathan

சுவையான முட்டை சுக்கா

nathan

ஆட்டுக்கால் பாயா

nathan

ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை

nathan