29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
19
சைவம்

எள்ளு சாதம்

என்னென்ன தேவை?

வேகவைத்த அரிசி -1கப்
எள் -3ஸ்பூன்
உளுந்து -3ஸ்பூன்
சிவப்பு மிளகாய் -3
முந்திரி -2ஸ்பூன்
கடுகு -1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை, உப்பு,
நல்லெண்ணெய் மற்றும்
எண்ணெய் -தேவையான அளவு
எப்படி செய்வது?

வேகவைத்த சாதத்தில் 2ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து கிளறி தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.(சாதம் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக நல்லெண்ணெய்). கடாயில் உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும். லைட்டாக வறுபட்டதும் சிவப்பு மிளகாய் சேர்த்து கிளறவும். அதில் எள் சேர்த்து கருகிவிடாமல் வறுத்து தனியே எடுத்து மிக்ஸரில் போட்டு கொரகொரப்பாக பொடியாக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு கலந்து வதக்கி, சிவப்பு மிளகாய்2, கறிவேப்பிலை ,பெருங்காயம் சேர்த்து வதக்கியதும் வேகவைத்த சாதத்தை கலந்து சாதம் சூடானதும் அரைத்துவைத்துள்ள பொடியை கலந்து கிளறி போதுமான அளவு உப்பு சேர்த்து இறக்கினால் எள்ளு சாதம் தயார்.
19

Related posts

ஈஸி லன்ச் :(10 நிமிடத்தில் செய்து விடலாம் )

nathan

மோர்க் குழம்பு

nathan

சத்தான பாலக் தயிர் பச்சடி

nathan

சுவையான கொத்தமல்லி சப்பாத்தி செய்வது எப்படி

nathan

சிம்பிளான… சுரைக்காய் குருமா

nathan

அமாவாசை வெள்ளை பூசணி சாம்பார்

nathan

புதினா சாதம்

nathan

வடை கறி

nathan

பட்டாணி புலாவ்

nathan