29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1461939599 9227
உடல் பயிற்சி

கோணாசனம்: முதுகுவலி தீர எளிய பயிற்சி

Kona’ என்றால் முழங்கை என்று அர்த்தம். ஆசணம் என்பது ஒரு கோணத்தில் ஒரு நிலைப்பாட்டோடு இருப்பது.இந்த கோணாசனம் முழங்கையிலிருந்து , முதுகெலும்பு மற்றும் பின்புறம் வரை செயலாக்கம் கொடுத்து பலனளிக்கும்.

செய்யும் முறை :

1. இருபுறமும் உங்கள் கைகளை ஆஸ்வாசப்படுத்தி நேராக நிற்கவும்.

2. உங்கள் உள்ளங்கைகள் தொடைகளை பக்கவாட்டத்தில் தொட்டுவாரு இருக்க வேண்டும்.

3. உங்கள் கால்களை குறைந்தது இரண்டு அல்லது மூன்று அடி அகலப்படுத்திகொள்ளவும்.

4. தோள்பட்டை அளவில் இரு கைகளையும் உயர்த்தி, கைகளை இணையாக வைக்கவும்.

5. மூச்சை உள்ளிழுக்க உங்கள் வலது காலை வலது கோணத்தில் வைத்து குனிய வேண்டும்.

6. வலது கையை கீழே நேராக வைத்து வலது காலை தொட்டு, இடது கையை நேர உயர்த்தவும்.

7. உங்கள் பார்வை மேலிருக்கும் இடது கை மீதே இருக்க வேண்டும்.

8. அதே சமயத்தில் இடது முட்டி வளையாமல் வைக்கவும்.

9. இப்போது நீங்கள் இருப்பது கோணாசனம், அதாவது உங்கள் உடல் கோண்லாக நிருத்திய கம்பத்தை போன்று இருக்கும்.

10. இந்த கோணத்தில் 10-15 நொடிகள் இருங்கள். பின்னர் மெதுவாக நின்று நிதானியுங்கள்

11. இதையே வலது காலுக்கும் பின்பற்ற வேண்டும். இடது புறமாக காலை சாய்த்து, இடது கையால் தொட்டவாரு வலது கையை உயர்த்த வேண்டும்.

நன்மைகள்:

• முதுகிற்கு வளைந்து கொடுக்கும் தன்மையை உருவாக்கும்

• உடல் சோர்வு நீங்கும்

• முதுகு வலிக்கு நிவாரணம் தரும்.

குறிப்பு:

அகண்ட விரிக்கையை பயன்படுத்தவும்.

முதல் முறை பொருமையுடனும் நிதானத்தை கடைபிடிக்கவும்

ஒரு வார பயிற்சிக்கு பிறகு 10 நொடிகளை 2 நிமிடமாக்களாம்.

ஆசனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகே உணவு அல்லது தூக்கம் என்பதை கடைபிடிக்க வேண்டும்.1461939599 9227

Related posts

மன அழுத்தம் போக்க உடற்பயிற்சி

nathan

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் மெல்லோட்டம்

nathan

சித்தர்கள் சொல்லி சென்ற 8 க்குள் ஒரு யோகா! அனைத்து நோய்களுக்கும் 21நாட்களில் தீர்வு! முயற்சி செய்து பாருங்கள்!

nathan

பெண்கள் தொப்பை குறைக்க தொப்பை குறைய உடற்பயிற்சி

nathan

கலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா? சைக்கிள் பயிற்சியா?

nathan

தொடைப் பகுதியை வலுவாக்கும் அர்த்த உட்கடாசனம்

nathan

பெண்களின் தொப்பையை குறைக்கும் பயிற்சி

nathan

பெண்களின் பின்னழகை கட்டுகோப்பாக வைத்து கொள்ள உடற்பயிற்சிகள்

nathan

தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

nathan